தமிழ் கற்றலை ஊக்குவிக்க புதிய திட்டம்

பண்பாட்டுக் கலைப்படைப்புகளைக் கண்டு அதன்மூலம் தமிழ்மொழியின் மீது மாணவர்கள் கொண்டுள்ள ஆர்வத்தை மேலும் வளர்க்கும் நோக்கத்தில் புதிய நிதி ஆதரவுத் திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு தொடங்கியுள்ள இந்தப் புதிய திட்டத்தின்மூலம் தமிழ் பயிலும் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள் முன்னிலையில் நேற்று மாலை கேம்பல் லேனில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் கலைப்படைப்புகள் நிறைந்த அறிமுக விழா நடைபெற்றது.

தொடக்கநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், மிலெனிய கல்வி நிலையம், உயர்கல்வி நிலையங்களில் தமிழ்மொழியைத் தாய்மொழிப் பாடமாகப் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இத்திட்டம் பலனளிக்கும். பண்பாட்டுக் கலைப்படைப்பு அனுபவ நிதி ஆதரவுத் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் நிதியை இதர நிதிஆதரவுத் திட்டங்களுடன் இணைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தைத் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவரும் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு விக்ரம் நாயர் நேற்று தொடங்கிவைத்தார்.

“கலைப்படைப்புகள் குறித்து நம் இளையர்களிடையே ஆர்வத்தை வளர்ப்பதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு அவசியமாகும்,” என்றார் திரு விக்ரம் நாயர்.

மாணவர்கள் இந்தக் கலைப்படைப்புகளைக் கண்டு களிக்க உதவும் நோக்கத்தில்தான் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இன்று முதல் மாணவர்களின் தேவைக்காகப் பள்ளிகள் இந்த நிதி ஆதரவைப் பெறலாம்.

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் இறுதிவரையில் நடைபெறும் பண்பாட்டுக் கலைப்படைப்புகளுக்கான நுழைவுச் சீட்டுகளை இந்த நிதி ஆதரவைக் கொண்டு வாங்கிக் கொள்ளலாம்.

தொடக்கநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் செல்லும் கலைநிகழ்ச்சிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நுழைவுச்சீட்டின் விலை மாணவருக்குத் தலா $40க்குள் இருக்கவேண்டும்.

தொடக்கக் கல்லூரி, மிலெனிய கல்வி நிலையம், உயர்கல்வி நிலையங்களில் பயில்வோருக்குப் பரிந்துரைக்கப்பட்ட விலை தலா $50.

ஒவ்வொரு பள்ளிக்குமான நிதி ஆதரவு ஆண்டுக்கு $1,500 உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மொழி விருப்பப் பாடம் உட்பட தமிழ்மொழி சிறப்புப் பாடம் வழங்கும் பள்ளிகளுக்கு ஓராண்டின் உச்ச வரம்பு $2,500.

தமிழ்ப் பண்பாட்டுக் கலைப்படைப்புகளின் நுழைவுச் சீட்டின் மொத்த விலையை ஏற்பாட்டாளர்களிடமோ கலைப்படைப்புக் குழுவிடமோ தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு நேரடியாக வழங்கும்.

நுழைவுச் சீட்டை வாங்குவதற்கு மட்டுமே இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதியைப் பயன் படுத்தலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!