ரயிலுக்கு அழகு சேர்க்கும் அலங்காரம்

இவ்வாண்டின் சீனப் புத்தாண்டை வரவேற்க  எம்ஆர்டி ரயில்களும் பேருந்துகளும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கிளார்க் கீ எம்ஆர்டி நிலையமும் டோபி காட் எம்ஆர்டி நிலையமும் விழாக் கோலம் பூண்டு பார்ப்பவர் மனதைக் கொள்ளைக்கொள்ளும் அளவுக்குக் காட்சி அளிக்கின்றன.

சைனா டவுன், தோ பாயோ, செங்காங், ஜூரோங் ஈஸ்ட், கிளமெண்டி போன்ற வட்டாரங்களில் வலம் வரும் சில பேருந்துகள் சீனப் புத்தாண்டைக் கருப்பொருளாகக் கொண்டு அலங்கரிக்கப்படும். படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்