வெளிநாட்டுப் பணிப்பெண்களின் நலனை மேம்படுத்த நடவடிக்கை

வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கான உரிமைகள், நலன்களை மேம்படுத்த தேசிய தொழிற்சங்க காங்கிரசால் (என்டியுசி) அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கான மையம் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

அவற்றின்படி பணிப்பெண்களுக்குப் போதுமான சட்ட ஆலோசனை, வாழ்க்கைத் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.

கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வுக் குறிப்புகளின்படி முதலாளிகளுக்கும் பணிப்பெண்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க தேவையான சமரசத் தீர்வுக் கட்டமைப்பு அமைக்கப்படும்.
 

Loading...
Load next