அறுவை சிகிச்சைக்கான முகக் கவசத்தை பயன்படுத்துக

1 mins read
e4f6dede-d697-4ad3-948e-d4b1d9ee9fe0
'N95' முகக் கவசம் போதாது என்று அமைச்சு கூறியுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வூஹான் கிருமி தொற்றுவதி லிருந்து பாதுகாத்துக் கொள்ள 'N95' முகக் கவசத்துக்குப் பதிலாக அறுவை சிகிச்சைக்கான முகக் கவசத்தை பொது மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று தொற்று நோய் நிபுணர்கள் கூறியுள்ளனர். சுகாதார அமைச்சும் இதனை வலியுறுத்தியுள்ளது. புதிய கிருமி சம்பவத்தில் அறுவை சிகிச்சைக்கான முகக் கவசம் ஏற்புடையதாக இருக்கும் என்று இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கான முகக் கவசங்கள் கிருமி பரவலைத் தடுப்பதோடு நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும் என்று கூறப்பட்டது.