தாக்கப்பட்ட டாக்சி ஓட்டுநர்

ஹவ்காங்கில் டாக்சி ஓட்டுநர் நேற்று முன்தினம் காலை தாக்கப்பட்டார். 

அந்த 54 வயது டாக்சி ஓட்டுநரின் முகத்தை ஆடவர் ஒருவர் பலமுறை குத்தியதாகவும் அவரது கழுத்தை நெரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

 டாக்சி ஓட்டுநரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க அந்த ஆடவர் முயன்றிருக்கக்கூடும் என்று போலிசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்துகின்றனர்.

தாக்கப்பட்ட டாக்சி ஓட்டுநர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.  அவரது மூக்கு, விலா எலும்பு முறிந்துள்ளன. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.