சிங்கப்பூரில் பள்ளிவாசல்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்

உல­க­ள­வி­லும் சிங்­கப்­பூ­ரி­லும் வேக­மா­கப் பர­வி­வ­ரும் கொவிட்-19 கிரு­மித் தொற்­றால் சிங்கப்பூரில் உள்ள பள்­ளி­வா­சல்­கள் தொடர்ந்து மூடப்­பட்­டி­ருக்­கும் என்று முயிஸ் எனப்­படும் சிங்கப்பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

நாளை (மார்ச் 26) வரை­யில் பள்­ளி­வா­சல்­கள் மூடப்­பட்­டி­ருக்­கும் என்று முன்­ன­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் கிரு­மித்தொற்­றின் சீற்­றம் குறை­யா­ததை அடுத்து பின்­னர் அறி­விக்­கப்­ப­டும்­வரை பள்ளி­வா­சல்­கள் தொடர்ந்து மூடப்­பட்­டி­ருக்­கும் என முயி­ஸின் தலைமை நிர்­வாகி ஈசா மசூத் தெரி­வித்­தார்.

சமூ­கத்­தில் கிரு­மித்தொற்­றின் அபா­யம் மேலோங்கி இருப்­ப­தால் மூத்த தலை­வர்­களை உள்­ள­டக்­கிய இஸ்­லா­மிய சட்­டக் குழு­வான ‘ஃபத்வா’ குழு நேற்று முன்­தி­னம் கூடி­ய­போது, தொடர்ந்து பள்­ளி­வா­சல்­களை மூட­வும் வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையைத் தற்­கா­லி­க­மாக ரத்து செய்­ய­வும் பரிந்­துரை செய்­த­தா­கக் கூறி­னார் முஃப்தி டாக்­டர் நஸி­ரு­தின் முக­மது நசிர்.

இந்­தப் பரிந்­து­ரை­களை முன்­வைக்க இரு கொள்­கை­களை வழி­காட்­டு­த­லாக அக்­குழு எடுத்­துள்­ளதை முஃப்தி விளக்­கி­னார்.

அனைத்து வித­மான தீங்­கு­களைத் தவிர்ப்­ப­தும் அபா­யத்­துக்­கும் தீங்­குக்­கும் இட்­டுச்செல்­லும் எல்லா கத­வு­க­ளை­யும் மூடு­வ­தும் அந்த இரு கொள்­கை­கள் என அவர் குறிப்­பிட்­டார்.

தொடர்ச்சியாக மூன்று வெள்­ளிக்­கி­ழமை தொழு­கை­களில் ஈடு­படா­தது குறித்த கவ­லை­ கொள்­ள­வேண்­டாம் என்­றும் இது­போன்ற சூழ­லில் அது பொருந்­தாது என்­றும் முஃப்தி தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே டாக்சி, தனியார் வாடகை கார், உணவு விநி­யோக ஓட்­டு­நர்­கள் உட்பட பல இடங்­க­ளுக்­குச் சென்று வேலை செய்­வோ­ருக்கு தொழுகை மேற்­கொள்ள வாய்ப்­ப­ளிக்­கும் பொருட்டு, தீவு முழு­வ­தும் 19 பள்­ளி­வா­சல்­களில் சிறிய அள­வி­லான தொழுகை இடங்­கள் மதிய ‘ளுஹர்’ தொழு­கைக்­கும் மாலை ‘அசர்’ தொழு­கைக்­கும் திறக்­கப்­பட்­டி­ருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இம்­மா­தம் 13ஆம் தேதி முதல் சிங்­கப்­பூ­ரின் அனைத்து பள்­ளி­வா­சல்­களும் மூடப்­பட்­டுள்­ளன. சிலாங்­கூ­ரில் நடந்த சமய நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­வர்­கள் சில­ருக்கு கொவிட்-19 கிரு­மித்தொற்று இருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து அந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

பள்­ளி­வா­சல்­கள் மூடப்­பட்­டி­ருந்­தா­லும் வேறு வழி­களில் சமூ­கத்­திற்கு அத்­தி­யா­வ­சிய சேவை­கள் தொடர்ந்து வழங்­கப்­படும் என்று முயிஸ் தலைமை நிர்­வாகி ஈசா மசூத் கூறி­னார்.

பள்­ளி­வா­சல் நிகழ்ச்­சி­களும் சமய சொற்­பொ­ழி­வு­களும் இணை­யம் மூலம் வழங்­கப்­படும் என்­றும் ஊட­கங்­கள் மூலம் புதிய பழக்­க­வழக்­கங்­கள் குறித்த சமூக செய்­தி­கள் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தும் பள்ளி­வா­சல்­க­ளின் செயல்­பா­டு­களில் ஒன்று என்­ப­தால் மூடப்­பட்ட நிலை­யி­லும் அந்­தச் சேவை­கள், குறிப்­பாக முதி­யோருக்கு, ‘ஸகாத்’ எனப்­படும் உத­வித் தொகை வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நீண்டகால ஸகாத் நிதி ஆத­ர­வுத் திட்­டத்­தில் உள்ள குடும்­பங்­களுக்கு சமூக மேம்­பாட்டு அதி­கா­ரி­களும் பள்­ளி­வா­சல் நட்­புக் குழு­வி­ன­ரும் உதவி செய்­வார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

31 சமூக மேம்­பாட்டு பள்­ளி­வா­சல்­க­ளி­லும் ஸகாத் நிதி ஆத­ரவு தொடர்ந்து வழங்­கப்­பட்டு வரும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!