சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் 0.5% கூடியது

தொடர்ச்­சி­யாக நான்­காண்டு சரி­வுக்­குப் பிறகு, கடந்த ஆண்டு சிங்­கப்­பூ­ரில் பிறப்பு விகி­தம் 0.5 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளது. 2019ல் 39,253 குழந்­தை­கள் பிறந்­தன. இந்த எண்­ணிக்கை 2018ல் 39,039 ஆக இருந்­தது.

கடந்த ஆண்டு சிங்கப்­பூர் அதி­க­மான குழந்­தை­களை வர­வேற்ற அதே­நே­ரத்­தில், ​​இறப்பு எண்­ணிக்­கை­யும் அதி­க­மாக இருந்­தது.

அதி­க­ரித்து வரும் வய­தான மக்­கள்­தொ­கை­யி­னால் சிங்­கப்­பூ­ரில் இறப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை கடந்த பத்­தாண்­டு­களில் ஆண்­டு­தோ­றும் தொடர்ந்து கூடி வரு­கிறது.

கடந்த ஆண்டு 21,385 பேர் இறந்­த­னர். 2018ன் 21,282 இறப்பைவிட இது 0.5% அதி­கம்.

கடந்த 2019ஆம் ஆண்­டுக்­கான மக்­கள்­தொகை விவ­ரங்­கள், மார்ச் மாதம் குடி­நு­ழைவு சோத­னைச் சாவ­டி­கள் ஆணை­யம் வெளி­யிட்ட சிங்­கப்­பூர் மக்­கள்­தொகை பற்­றிய 2019 நான்­காம் காலாண்டு அறிக்­கை­யில் உள்­ளன.

எப்­ப­டி­யி­ருந்­தா­லும், சிங்­கப்­பூ­ரின் பிறப்பு விகி­தத்­தில் ஏற்­படும் எத்­த­கைய அதி­க­ரிப்­பும் மகிழ்ச்­சிக்­கு­ரி­யது என்­றார் கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் சமூக ஆய்­வ­கத்­தின் தலை­வர் டாக்­டர் மேத்யூ மேத்­யூஸ் கூறி­னார்.

கடந்த ஆண்டு சிங்­கப்­பூ­ரர்­க­ளின் மொத்த பிள்­ளைப்­பேறு விகி­தம் 1.14 ஆக இருந்­தது, இது உல­கின் மிகக் குறை­வான ஒன்­றா­கும்.

குழந்­தைப் பேற்றை ஊக்­கு­விக்க அர­சாங்­கம் பல நட­வ­டிக்­கை­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. பெற்­றோ­ருக்கு குழந்தை போன­சாக ரொக்­கத் தொகை, கரு­வு­று­தல் சிகிச்­சைக்­கான கட்­ட­ணங்­களை அதி­கக் கட்­டுப்­ப­டி­யா­கக்­கூ­டி­ய­தாக வைத்­தி­ருத்­தல், பாலர்­பள்ளி மானி­யங்­கள் அதி­க­ரிப்பு, பெற்­றோர் வேலை, குடும்­பம் இரண்­டி­னது கட­மை­க­ளை­யும் கையாள உத­வும் வகை­யில் அதிக நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பா­டு­களை ஊக்­கு­வித்­தல் போன்­றவை இதில் அடங்­கும்.

எனி­னும், இந்த ஆண்­டில் கொவிட்-19 பர­வல் கார­ண­மாக எதிர்­கா­லத்­தில் குழந்­தைப்­பேறு குறை­ய­லாம் என்று கல்­வி­யா­ளர்­கள் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­த­னர்.

பொரு­ளி­யல் நிலைமை மந்­த­மாக இருந்த கடந்த சில ஆண்­டு­களில் பிறப்­பு­வி­கி­தம் குறைந்­தி­ருந்­ததை டாக்­டர் மேத்யூ சுட்­டி­னார்.

மேலும் பலர் திரு­ம­ணம் செய்­து­கொள்­ளா­ம­லேயே உள்­ளனர். சிங்­கப்­பூ­ரில் திரு­ம­ணம் செய்யாமல் குழந்தை பெற்­றுக்­கொள்­வோ­ரும் குறை­வா­ன­வர்­களே என்று கல்­வி­யாள்­கள் குறிப்­பிட்­ட­னர்.

கடந்த ஆண்­டு­களில் பிறப்பு விகி­தம் தொடர்ந்து சரிந்து வந்­த­தால், எதிர்­கா­லத்­தில் குழந்தை பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வய­தி­லி­ருக்­கும் பெண்­களில் எண்­ணிக்கை குறை­வா­கவே இருக்­கும் என்று கூறி­னார் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் லீ குவான் இயூ பொதுக் கொள்­கைக் கழ­கத்­தைச் சேர்ந்த டாக்­டர் டான் போ லின்.

குறைந்து வரும் பிறப்பு விகி­த­மும் அதி­க­ரித்து வரும் இறப்பு விகி­த­மும் சேரும்­போது ஏற்­படும் விளைவு கவ­லைக்­கு­ரி­யது என்று கல்­வி­யா­ளர்­கள் கூறி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!