பாதுகாப்பான பொதுத் தேர்தல்: அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ஆகும்

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சூழ­லில் பொதுத் தேர்­த­லைப் பாது­காப்­பாக நடத்­து­வ­தற்கு எடுக்­கப்­பட வேண்­டிய தேவை­யான தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் வரும் வாரத்­தில் நாடா­ளு­மன்­றத்­தில் ஒரு மசோதா தாக்­கல் செய்­யப்­படும்.

நாடா­ளு­மன்­றத் தேர்­தல் (கொவிட்-19 சிறப்பு ஏற்­பா­டு­கள்) மசோதா தொடர்­பில் ஊட­கங்­கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்த தேர்­தல் துறை, வாக்­கா­ளர்­கள், வேட்­பா­ளர்­கள், தேர்­தல் அதி­கா­ரி­கள் ஆகி­யோ­ரின் சுகா­தா­ர­மும் பாது­காப்­புமே மிக முக்­கி­யம் எனத் தெரி­வித்­தது.

கொரோனா கிரு­மித்­தொற்­றுச் சூழ­லில் அடுத்த பொதுத் தேர்­தலை நடத்த வேண்­டு­மெ­னில், பொதுத் தேர்­த­லைப் பாது­காப்­பாக நடத்­து­வதை உறு­தி­செய்­தி­டத் தேவை­யான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளுக்கு வகை­செய்­யும் நெருக்­க­டி­நி­லைத் திட்­டங்­க­ளைத் தேர்­தல் துறை தயார்­செய்­தல் வேண்­டும் என அத்­துறை விளக்­கம் அளித்­தது.

“நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போது வாக்­கா­ளர்­கள், வேட்­பா­ளர்­கள், தேர்­தல் அதி­கா­ரி­கள் ஆகி­யோ­ரின் பாது­காப்பை உறு­தி­செய்­வ­தற்­கான தற்­கா­லிக ஏற்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்த தேர்­தல் துறைக்கு அனு­மதி அளிக்­கத் தேவை­யான சட்ட அம்­சங்­கள் அந்த மசோ­தா­வில் இடம்­பெற்­றுள்­ளன,” என்று தேர்­தல் துறை கூறி இருக்கி றது.

 2021 ஏப்­ரல் 14ஆம் தேதிக்­குள் அடுத்த பொதுத் தேர்­தல் நடத்­தப்­ப­ட­வேண்­டும். 

இந்­நி­லை­யில், நாடா­ளு­மன்­றம் ஒப்­பு­தல் அளிக்­கும்­பட்­சத்­தில் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் (கொவிட்-19 சிறப்பு ஏற்­பா­டு­கள்) மசோதா அடுத்த பொதுத் தேர்­த­லுக்­குள் நடப்­புக்கு வந்­து­வி­டும்.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளைப் பற்­றிய விவ­ரங்­கள் இன்­னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. 

ஆயி­னும், இப்­போ­தைக்கு கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­களில் ஒன்­றாக பள்ளி, வேலை­யி­டம் தவிர்த்து வேறு இடங்­களில் பத்­துப் பேருக்கு மேல் ஓரி­டத்­தில் ஒன்­று­கூட அனு­மதி கிடை­யாது. 

இதே நிலை தொடர்ந்­தால் வழக்­க­மான பிர­சா­ரக் கூட்­டங்­களோ, பேர­ணி­களோ சிங்­கப்­பூ­ரில் உள்ள பொது இடங்­களில் இடம்­பெற வாய்ப்பு இருக்­காது.

அப்­படி ஒரு நிலை ஏற்­பட்­டால்  என்ன செய்­வீர்­கள் என்று நாடாளு மன்ற உறுப்­பி­னர்­கள் சில­ரி­டம் ‘ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்’ கருத்து கேட்­டது. 

சமூக ஊட­கங்­கள், நிகழ்­நேர காணொளி ஒளி­ப­ரப்பு ஆகியவற்­றின் மூல­மாக வாக்­கா­ளர்­க­ளைச் சென்­ற­டைய முயல்­வோம் என்று அவர்­கள் பதில் கூறி­னர்.