அடிப்படை ராணுவ பயிற்சி ஒரு மாதம் ரத்து

சிங்கப்பூர் ஆயுத படைகள் நாளை ( ஏப்ரல் 7ஆம் தேதி) முதல் மே மாதம் 4ஆம் தேதி அடிப்படை ராணுவ பயிற்சியை ரத்து செய்யும். அரசாங்கத்தின் கொவிட்-19 நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டத்துடன் ஒத்துப்போகும் விதமாக இது உள்ளது.

தேசிய சேவையைத் தொடங்கியுள்ள கிட்டத்தட்ட 3,400 முழுநேர வீரர்கள் வீட்டில் இருந்துகொண்டு தேசிய வழிமுறைகளை மதித்து நடக்கும்படியும்  தேவையான நடவடிக்கைகளுக்காக மட்டும் வெளியே செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக தற்காப்பு அமைச்சு கேட்டுக்கொண்டது.

அடிப்படை திறன் மற்றும் உடற்கட்டு மேம்பாட்டுக்கான வீட்டில் பின்பற்றக்கூடிய சில வழிமுறைகள் இந்த வீரர்களுக்கு வழங்கப்படும்.பயிற்சி ரத்து செய்யப்படும் காலக்கட்டமும் வீரர்களின் தேசிய சேவையாகக் கருதப்படும். அவர்கள் முழுநேர தேசிய சேவையிலிருந்து வெளியேறும் தேதி பாதிக்கப்படாது.

கொவிட் -19 கிருமித்தொற்று ஓய்ந்த பின்பு அவர்கள் அந்தப் பயிற்சியை நிறைவு செய்வர்.