வீவக மறுவிற்பனை சரிவு

வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் விற்பனை கடந்த மாதம் மேலும் குறைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் விற்பனை இதுவரையில்லாத அளவுக்குக் குறைந்ததை அடுத்து மே மாதத்தின் விற்பனையும் குறைவாக உள்ளது.

மே மாதத்தில் 364 வீடுகளை மட்டுமே விற்கப்பட்டன. ஏப்ரலில் இந்த எண்ணிக்கை 423 ஆக இருந்தது. இரண்டு எண்ணிக்கைகளும் நோய்ப்பரவல் முறியடிப்பதற்கான அதிரடித் திட்டத்தின்போது பதிவாயுள்ளன. 

முன்பு நிலவிய நோய்ப்பரவல் காலக்கட்டங்களின்போது பதிவான விற்பனை எண்ணிக்கைகளைவிட தற்போதை எண்ணிக்கை குறைவாக உள்ளது. மே 2003ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் நோய்ப்பரவலின்போதும் விற்பனை எண்ணிக்கை 2,272 ஆக உள்ளது.