வேலை, திறன் திட்டம் மூன்றுவிதமாக கைகொடுக்கும்

கொவிட்-19 கொள்­ளை­நோ­யின் பாதிப்­பில் இருந்து சிங்­கப்­பூர் மீண்­டு­வர சில ஆண்­டு­கள் ஆக­லாம் என்­றும் ஊழி­யர்­கள், மாண­வர்­களின் ‘கொவிட் தலை­முறை’ உரு­வா­கா­மல் தடுக்க பாடு­பட வேண்­டும் என்­றும் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்து உள்­ளார்.

நாடா­ளு­மன்­றத்­தில் வலி­மைக்­கான வர­வு­செ­ல­வுத் திட்ட விவா­தத்தை முடித்து வைத்­துப் பேசிய நிதி அமைச்­ச­ரு­மான திரு ஹெங், வேலை மற்­றும் திறன் தொகுப்­புத் திட்­டம் கொவிட்-19 பொரு­ளி­யல் சரிவு தாக்­கத்­தி­லி­ருந்து ஊழி­யர்­களை மீட்க மூன்­று­வி­தத்­தில் உத­வி­பு­ரி­யும் என்­றார்.

வேலை­க­ளைப் பாது­காப்­பது, புதிய வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வது, அதி­கம் பாதிக்­கப்­பட்ட பிரி­வி­ன­ருக்கு கூடு­தல் உதவி நல்­கு­வது போன்ற வழி­களில் அத்­திட்­டம் செயல்­படும் என்று அவர் தெரி­வித்­தார்.

“சிங்­கப்­பூ­ரில் கடந்த ஆண்டு கிட்­டத்­தட்ட 73,000 பேர் வேலை­யின்றி இருந்­த­னர். இவ்­வாண்­டில் அந்த எண்­ணிக்கை 100,000க்கும் மேல் செல்­லக்­கூ­டும். கடந்த 2003ஆம் ஆண்டு சார்ஸ் தொற்று­ நோய் காலத்­தில் வேலை­யின்றி இருந்­தோர் 91,000 என்ற எண்­ணிக்­கையை தாண்­டி­வி­டக்கூடி­ய­தாக இவ்­வாண்­டின் வேலை­யி­ழப்பு நில­வ­ரம் இருக்­கும்,” என்றார் திரு ஹெங்.

2009 உலக நிதி நெருக்­கடி யின்போது உலகளவில் 22 மில்­லி­யன் பேர் வேலை இழந்­த­தா­க­வும் கொரோனா கொள்ளை நோய் அதை­விட ஆக அதி­க­மாக 25 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோ­ரின் வேலை­க­ளைப் பறித்­து­வி­டக்கூடும் என்­றும் அனைத்­து­லக தொழி­லா­ளர் நிறு­வ­னம் வெளியிட்ட கூற்றை அவர் மேற்­கோள் காட்­டி­னார்.

“வேலை­யி­ழந்­தோர் எண்­ணிக்­கை­யைத் தாண்டி மேலும் அதிக பொரு­ளி­யல் வீழ்ச்சி ஏற்­ப­ட­லாம்.

“வேலை­க­ளைத் தக்­க­வைத்­துக்­கொள்­வோர்கூட பதவி உயர்­வின்­மை­யை­யும் கணி­ச­மான வரு­வாய் இழப்­பை­யும் சந்­திக்­கக்­கூ­டும்.

“இந்­நி­லைமை மோச­மான சுழற்­சிக்கு இட்­டுச்­செல்­லும். அதா­வது, வரு­வாய் இழப்பால் வாங்கும் திறன் குறை­யும். வாங்கும் திறன் குறைந்­தால் வர்த்­த­கம் பாதிக்­கப்­படும். அத­னால் ஊழி­யர் தேவை குறை­யும்,” என்று துணைப் பிர­த­மர் விளக்­கி­னார்.

“உலக நிதி நெருக்­கடி ஏற்பட்­ட­ போது அதற்கு முந்­திய நிலையை மீண்­டும் அடைய உலக நாடு­க­ளுக்கு எட்டு முதல் பத்து ஆண்­டு­கள் வரை தேவைப்­பட்­டன. அவ்­ வ­ளவு அதிக காலமா என்று நாம் வியந்­து­வி­டக்­கூ­டாது. கொவிட்-19 தாக்­கத்­தி­லிருந்து மீள அதேபோல அல்லது அதைவிட கூடுதல் காலம் நமக்குத் தேவைப்படலாம்.

“இருந்­த­போ­தி­லும் கொவிட்-19 ஏற்­ப­டுத்­தும் மோச­மான சில சிர­மங்­களை சிங்­கப்­பூர் தவிர்த்து வந்­தி­ருக்­கிறது.,” என்­றும் மன்­றத்­தில் திரு ஹெங் கூறி­னார்.

“பத்து மாதங்­க­ளுக்கு மேற்­பட்ட காலத்­தில் 1.9 மில்­லி­யன் வேலை­களை ஆத­ரிக்க வேலை ஆத­ர­வுத் திட்­டம் மூலம் அர­சாங்­கம் $23.5 பில்­லி­ய­னைச் செல­வி­டும். உள்­ளூர் ஊழி­யர்­களை வேலை யில் தக்­க­வைத்­துக்கொள்ள முத­லா­ளி­க­ளுக்கு அளிக்­கப்­படும் சம்­பள சலுகை இது. இவற்­றில் மூன்­றில் இரு பங்­கி­னர் சிறிய-நடுத்­தர நிறு­வன முத­லா­ளி­கள்.

“இது­வரை $11 பில்­லி­ய­னுக்கு மேல் வழங்­கப்­பட்டுவிட்­டது. வர்த்­த­கம் மட்­டும் வள­ர­வேண்­டும் என்­ப­தற்­காக இதனைச் செய்யவில்லை. சம்­ப­ளச் செலவை ஓர­ள­வுக்கு ஈடு­கட்­டு­வ­தற்­கான திட்­டம் இது. இச்­செ­ல­வைச் சரிக்­கட்ட உத­வி­னால் முத­லா­ளி­கள் தங்­க­ளது ஊழி­யர்­க­ளுக்கு வேலை­யை­யும் சம்­ப­ளத்­தை­யும் தொடர்ந்து தரு­வார்­கள்,” என திட்­டத்­தின் நோக்­கத்தை விவ­ரித்­தார் திரு ஹெங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!