மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன்: சேமிப்பும் மீள்திறனும் வலுவடைய வேண்டும்

நெருக்­க­டி­யைச் சமா­ளிக்க நம்­மி­டம் நிதி சேமிப்­பும் மக்­களும் ஆற்­ற­லும் வலு­வாக இருக்­க­வேண்­டும் என்­பதையே கொவிட்-19 கிரு­மித்­தொற்று வெளிச்­சம் போட்டு காட்டு­கிறது என்று மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் தெரி­வித்து இருக்­கி­றார்.

தன்­னு­டைய 40 ஆண்­டு­கால பொதுச் சேவை­யில் சிங்­கப்­பூர் இது­வரை காணாத ஆகப் பெரிய, மிக­வும் சிக்­க­லான சவால் என்று கொரோனா கிரு­மித்­தொற்றை வர்­ணித்த திரு டியோ, இந்­தத் தொற்­றைச் சமா­ளித்து மீண்டு வரும்­போது மிக­வும் மீள்­தி­ற­னு­டன் கூடிய நாடா­க சிங்­கப்­பூர் திகழ வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார்.

அமைதி காலத்­தில் அடை­யாளம் தெரி­யாத மிரட்டல்களை எதிர்­நோக்கு­வ­தற்குத் திட்­ட­மிட வேண்­டிய தேவை நமக்கு இருக்­கிறது என்­ப­தும் எப்­போ­துமே சேமிப்­பை­யும் மக்­க­ளை­யும் ஆற்­ற­லை­யும் வலு­வாக்கி வர­வேண்­டிய தேவை இருக்­கிறது என்­ப­தும் தமக்குத் தெள்­ளத்­தெ­ளி­வா­கத் தெரி­ய­வந்­தி­ருக்­கும் பாடம் என்று திரு டியோ குறிப்­பிட்­டார்.

இப்­ப­டிப்­பட்ட வளம் நம்­மி­டம் இருந்­தால் நெருக்­கடி ஏற்­ப­டும்­போது உடனே செயல்­பட்டு நீக்குப்­போக்­கு­டன் வேக­மாக நாம் மீண்டு வர முடி­யும் என்று அவர் கூறி­னார்.

கொவிட்-19க்குப் பிந்­தைய சிங்­கப்­பூ­ரின் எதிர்­கா­லம் பற்றி அமைச்­சர்­கள் ஆற்றி வரும் தேசிய உரை­யில் மூன்­றா­வது உரை­யாக நேற்று திரு டியோ பல கருத்­து­க­ளைத் தெரி­வித்­தார்.

பிரச்­சி­னை­க­ளைக் கையா­ளு­வதற்­கான சிங்­கப்­பூ­ரின் ஆற்­றல் உல­க­ள­வில் அத­னு­டைய நிலை­யில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்று வலி­யு­றுத்­திய மூத்த அமைச்­சர், நாம் வலு­வாக, வெற்­றி­க­ர­மாக, ஐக்­கி­ய­மாக இருந்­தால்தான் நிச்­ச­ய­மில்­லாத உல­கில் சொந்­த­மாக காலூன்றி நிற்க முடி­யும். வெளி சவால்­க­ளை­யும் சமா­ளிக்க முடி­யும் என்று குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 சிங்­கப்­பூ­ரின் ஆற்­ற­லுக்­கும் உறு­திக்­கும் விடப்­பட்டு உள்ள கடு­மை­யான சவால் என்று வர்­ணித்த அவர், அதற்கு அள­விட முடி­யாத பதில் நட­வ­டிக்­கை தேவைப்­ப­டு­வ­தா­கக் கூறி­னார்.

“இந்த நெருக்­கடி நம்­மு­டைய வளங்­க­ளை­யும் ஆற்­றல்­க­ளை­யும் விஞ்­சி­விட்­டது என்­றா­லும் இதில் வேக­மா­கச் செயல்­பட நம்­மால் முடிந்து இருக்­கிறது.

“அலை அலை­யா­கக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்ட போதெல்­லாம் ஒவ்­வோர் அலை­யை­யும் சமா­ளிக்க புதுப்­புது நட­வ­டிக்­கை­களை அமல்­படுத்தி கிரு­மிப் பர­வ­லின் வேகத்­தைக் கட்­டுப்­ப­டுத்த வேண்டி இருந்­தது,’’ என்று அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளின் ஆத­ரவு கார­ண­மாக சமூ­கத்­தில் தொற்று குறைந்து இருக்­கிறது. வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டையே கொரோனா கிரு­மித்­தொற்று நிலைப்­ப­டுத்­தப்­பட்டு இருக்­கிறது என்று அவர் குறிப்­பிட்­டார்.

தேசிய பாது­காப்பு ஒருங்­கிணைப்பு அமைச்­ச­ரு­மான திரு டியோ, சிங்­கப்­பூர் மீள்­தி­ற­னின் மூன்று அம்­சங்­க­ளைக் கோடி­காட்­டி­னார்.

நெருக்­க­டி­யைச் சமா­ளிப்­ப­தில் மீள்­தி­றன், பொரு­ளி­யல் மீள்­தி­றன், சமூக மீள்­தி­றன் ஆகி­யவை அந்த மூன்று அம்­சங்­கள் என்று மூத்த அமைச்சர் தெரி­வித்­தார்.

நெருக்­க­டி­யைச் சமா­ளிக்க செயல்­படும் விதத்­தைப் பொறுத்­த­வரை­யில் சிங்­கப்­பூர் தன்­னு­டைய ஆற்­றல்­களை அதி­கப்­ப­டுத்தி நோயா­ளி­களை வேக­மா­கக் கவனிக்க வேண்டி இருந்­தது.

இதில் அது தன் மக்­கள் வளத்­தை­யும் ஆற்­றல்­க­ளை­யும் பயன்­படுத்­திக் கொண்­டது என்று அவர் விளக்­கி­னார்.

வெளி­நாட்டு நோயா­ளி­க­ளிடையே கிருமி தொற்­றி­யது பெரிய சவா­லாக இருந்­தது என்­ப­தை சுட்­டிய அவர், சார்ஸ் கிரு­மி­யின்­போது பெற்ற அனு­ப­வத்­தைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு விடு­தி­களில் கண்­கா­ணிப்­பு­க­ளை­யும் முன்­னெச்­ச­ரிக்­கை­க­ளை­யும் அரசாங்கம் வேகப்­ப­டுத்­தி­யது.

இருந்­தா­லும் அவை எல்­லாம் போத­வில்லை. கொரோனா சார்ஸ்­கிருமியைவிட வேக­மா­கத் தொற்றி­யதே இதற்குக் கார­ணம்.

ஏப்­ரல் மாதம் 4ஆம் தேதி விடுதி­களில் கிருமி தொற்­றி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை 26 ஆக இருந்­தது. ஆனால் ஏப்­ரல் 20ல் அந்த எண்­ணிக்கை 1,000ஐ கடந்­து­விட்­டது.

அர­சாங்­கம் மற்­றும் தனி­யார் துறை­யைச் சேர்ந்த மனி­த­வ­ளத்­தை­யும் வளங்­க­ளை­யும் திரட்ட வேண்­டிய தேவை இருந்­தது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

பொரு­ளி­யல் மீள்­தி­ற­னைப் பற்றி விளக்­கிய அவர், கிருமி கார­ண­மாக வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­பட்­டது. பொருள்­ விநி­யோ­கச் சங்­கிலி பாதிப்­புக்கு உள்­ளா­னது.

நம்­மி­டம் அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள் இருப்பு இருந்­த­தால் நிலை­மை­யைச் சமா­ளிக்க முடிந்­தது என்று கூறினார்.

நான்கு வர­வு­செ­ல­வுத் திட்­டங்­களை­யும் அர­சாங்­கம் தாக்­கல் செய்­தது. கடந்த கால இருப்­பில் இருந்து $52 பில்­லி­யனைப் பயன்­படுத்த முடிவு செய்­தது.

1967ஐ விட இப்­போது அதிக மீள்­தி­ற­னு­டன் நாம் இருக்­கி­றோம் என்று திரு டியோ தெரி­வித்தார்.

புதிய சந்­தை­க­ளை­யும் தொழில்­களை­யும் வேலை­க­ளை­யும் உரு­வாக்­கு­வ­தற்­குத் தோதான நல்ல நிலை­யில் நாம் உள்ளதாகவும் அவர் குறிப்­பிட்­டார்.

சமூக மீள்­தி­ற­னைப் பற்றி விளக்­கிய மூத்த அமைச்சர், சிங்­கப்­பூ­ரர்­கள் இனம், மொழி பாரா­மல் உதவி தேவைப்­படு­வோ­ரி­டம் கரு­ணை­யு­டன், அன்­பு­டன், சேவை மனப்­பான்­மை­யு­டன் நடந்­து­கொண்­டதைக் காண்­பது தமக்கு மகிழ்ச்சி அளிப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!