சிங்கப்பூரில் டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை நெருங்குகிறது

சிங்கப்பூரில் டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை நெருங்குகிறது. இந்த வாரம் ஐந்து நாட்களுக்குள் 748 பேருக்கு டெங்கி தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டில் உச்சத்தைத் தொடும் அளவாக ஒரே வாரத்தில் 891 பேருக்கு டெங்கி தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. 2013, 2014ஆம் ஆண்டுகளில் 40,000க்கும் அதிகமானோர் டெங்கியால் பாதிக்கப்பட்டிருந்தனர்.அப்போது 14 பேர் டெங்கி பாதிப்பால் உயிரிழந்தனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 12 பேர் டெங்கியால் உயிரிழந்துவிட்டனர். இவ்வாண்டு இதுவரை டெங்கி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,585ஆக உள்ளது.
இந்நிலையில், டெங்கி தொற்று குழுமங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை அத்தகைய 205 குழுமங்கள் அடையாளம்

காணப்பட்டுள்ளன. அவற்றில் 64 குழுமங்கள் “அதிக அபாயமானவை”யாக கருதப்படுகின்றன. அவற்றின் ஒவ்வொன்றிலும் 10 அல்லது அதற்கும் மேற்பட்டோர் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இரு ஆகப் பெரிய டெங்கி தொற்று குழுமங்கள் பொத்தோங் பாசிர் வட்டாரத்தில் உள்ளன. அவற்றின் ஒன்றில் 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றொன்றில் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொத்தோங் பாசிர் தொகுதியில் மேலும் ஒரு டெங்கி தொற்று குழுமமும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு அடையாளம் காணப்பட்டுள்ள ஆறு டெங்கி தொற்று குழுமங்கள் ஒவ்வொன்றிலும் 100க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு மூன்றாவது ஆகப் பெரிய டெங்கி தொற்று குழுமம் தெம்பனிஸ் குழுத்தொகுதியில் அமைந்துள்ளது. அதில் 134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!