கல்வி அமைச்சு: 4 மாணவர்கள், ஓர் ஆசிரியர் ஆகியோருக்கு கிருமித்தொற்று

சிங்கப்பூர் சமூகத்தில் நேற்று (ஜூலை 7) 20 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதில் நால்வர் மாணவர்கள், oor ஆசிரியர்.

பிடோக் வியூ உயர்நிலைப்பள்ளி, ஈஸ்ட் ஸ்பிரிங் தொடக்கப்பள்ளி, ஜூரோங் வெஸ்ட் தொடக்கப்பள்ளி, ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள், அசம்ப்ஷன் பாத்வே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஆகியோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

பாதிக்கப்பட்ட 4 மாணவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும்,  தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

கடந்த வாரம் பள்ளிக்குச் சென்றிருந்தபோது அவர்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருந்ததாகக் கூறப்பட்டது.

ஆசிரியருக்கு ஏற்பட்ட தொற்று தொடர்பிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்துவது உள்ளிட்ட கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சு தெரிவித்தது.