தெங்காவில் 20% நிலப்பகுதியில் பசுமை: கார்கள் இல்லாத புது நகர மையம் அமையும்

சிங்­கப்­பூ­ரில் புதி­தாக அமை­ய­விருக்­கும் தெங்கா குடி­யி­ருப்புப் பகு­தி­யில் சுமார் 20 விழுக்­காட்டு இடம் பசுமைப் பகு­தி­யாக இருக்­கும் என்று வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் அறி­வித்து இருக்­கிறது.

அங்கு அமை­யும் புதிய ‘பார்க்’ என்ற வட்­டா­ரத்­தில் ஊசி­யி­லைக்­காட்டை கருப்­பொ­ரு­ளா­கக் கொண்ட சிறார் விளை­யாட்டு திடல்­கள், மத்­திய பூங்கா என்று வர்­ணிக்­கப்­படும் பசுமை பகுதி, 1.5 கி.மீ. நீள ஊசி­யி­லைக்­காட்டுப் பாதை ஆகிய பல­வும் சிறப்பாக அமைந்து இருக்­கும்.

இந்­தப் பாதை அங்கு இடம்­பெறும் பல்­வேறு குடி­யி­ருப்பு புளோக்கு­களை இணைக்­கும்.

சிங்­கப்­பூ­ரின் ஆகப்­ பு­திய குடி­யி­ருப்புப் பேட்­டை­யாக தெங்கா உரு­வா­கிறது. அந்­தப் பேட்­டை­யில் ஐந்து வட்­டா­ரங்­களை அமைக்­கத் திட்­ட­மி­டப்­பட்டு இருக்­கிறது. அவற்­றில் ‘பார்க்’ என்­பது மூன்­றா­வது வட்­டா­ர­மா­கும்.

பெயரே ‘பார்க்’ (பூங்கா) என்று இருப்­ப­தால் இப்­ப­கு­தி­யில் பசுமை மண்­டி­யி­ருக்­கும். மக்­க­ளுக்குப் பூங்கா போன்ற சூழலை இது உரு­வாக்­கித் தரும். நகர மையத்­தை­யும் இதர பகு­தி­களையும் இந்­தப் பார்க் வட்­டா­ரம் மிக­வும் வச­தி­யாக இணைக்­கும்.

700 ஹெக்­டர் பரப்­ப­ள­வில் அமை­யும் தெங்கா காட்டு நகர்ப் பகுதி ஏறக்­கு­றைய பீஷான் அளவுக்குப் பரந்து இருக்­கும்.

தெங்­கா­வில் சுமார் 20 விழுக்­காட்டுப் பகுதி பசு­மைக்­காக ஒதுக்­கப்­படும். தெங்­கா­வில் உரு­வாக்­கப்­படும் ஐந்து வட்­டா­ரங்­களும் மக்­கள் இயற்­கை­யோடு ஒன்றி வசிக்­கும் வகை­யில் வடி­வ­மைக்­கப்­படும்.

மக்­க­ளின் ஒட்­டு­மொத்த நல்­வாழ்வை அந்த வடி­வ­மைப்­பு­கள் மேம்­ப­டுத்­தும். சிறந்த உடல்­ந­லத்­தை­யும் பசு­மைச் சூழ­லை­யும் அந்த வட்­டா­ரம் பலப்­ப­டுத்­தும் என்று கழகம் குறிப்­பிட்டு இருக்­கிறது.

பார்க் வட்­டா­ரம் சுமார் 104 ஹெக்­டர் பரப்­ப­ள­வில் இருக்­கும். அங்­கு­தான் கார்­கள் இல்­லாத தெங்கா நகர மையம் அமை­யும். தெங்­கா­வின் பசுமை மைய­மா­கத் திக­ழ­வி­ருக்­கின்ற ‘மத்­திய பூங்­கா­வில்’ தாவர வளம் மண்டியிருக்­கும்.

அங்கு காட்டு நீரோடை ஒன்­றும் அமை­யும். சுற்­றுச்­சூ­ழல் தொடர்பு­களைப் பலப்­ப­டுத்­தும் வகை­யில் பூங்­காக்­க­ளை­யும் பசுமை இடங்­க­ளை­யும் உரு­வாக்­கும் நோக்­கத்­தில் இந்­தக் கழ­கம் தேசிய பூங்கா கழகத்­து­டன் சேர்ந்து செயல்­பட்டு வரு­கிறது.

புதி­ய 1.5 கி.மீ. நீள ஊசி­யிலைக்­காட்­டுப் பாதை பல்­வேறு புளோக்­கு­க­ளை­யும் இணைக்­கும். மக்­கள் அதன் வழி­யாக மத்­திய பூங்கா பகு­திக்­குச் செல்­ல­லாம்.

தெங்கா நகரை சுற்­றி­லும் அமை­யும் 15 மீ. முதல் 20 மீ. வரை அக­லம் உள்ள காட்டுப் பகு­தி­யை­யும் அவர்கள் அந்த வழி மூலம் எட்­ட­லாம். இந்­தப் பாதை நெடு­கி­லும் சிறார் விளை­யாட்­டுத் திடல்­கள், உட­லு­றுதி நிலை­யங்­கள், திறந்­த­வெளி பசுமை இடங்­கள், மக்­கள் அமர்ந்து பொழு­து­போக்கும் இடங்­களும் இருக்­கும். இந்­தப் பாதைக்கு இணை­யாக 100 மீ. அக­லம், 5 கி.மீ. நீளம் உள்ள காட்டுப் பாதை ஒன்­றும் செல்­லும்.

அது தெங்­காவை பக்­கத்­தில் உள்ள மேற்கு மற்­றும் மத்­திய நீர்த்­தேக்­கப் பகு­தி­க­ளுக்கு இடைப்­பட்ட பசுமை கட்­ட­மைப்­பு­டன் இணைக்­கும். தாவரம் மற்றும் தோட்டப் பண்ணைகளுக்கான ஏற்பாடும் இருக்கின்றன. இவை தெங்காவின் இதர இரண்டு வட்டாரங்களின் விரிவாக்கங்களாக அமையும்.

அந்தப் பண்ணைகள் சராசரியாக 600 மீ. நீளமும் 40 மீ. அகலமும் இருக்கும். இவை ‘பார்க்’ வட்டாரம் ஊடே அமைந்திருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!