சுடச் சுடச் செய்திகள்

8 வட்டாரங்களில் மொத்தம் 7,800 புதிய வீடுகள்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் 7,862 தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகளை நேற்று விற்பனைக்கு விட்டுள்ளது.

மே மாதம் புதிய வீடுகளுக்கு விண்ணப்பிக்க முடியாதவர்களுக்குத் தற்போது தேர்வு செய்ய  ஈரறை ஃபெளக்ஸி வீடுகள் முதல் ஐந்தறை வீடுகள் வரை அதிக தெரிவுகள் இருக்கும்.

கடந்த 14 ஆண்டுகளில் முதல் முறையாக முதிர்ச்சி அடைந்த வட்டாரமான பீஷானில் 472 புதிய வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

காலாங் ஆற்றைப் பார்த்தவாறு அமைந்துள்ள ‘பிஷான் டவர்ஸ்’ ஈரறை ஃபெளக்ஸி, மூவறை, நான்கறை வீடுகளைக் கொண்டது.

பீஷான் ஸ்ட்ரீட் 11, பிராடல் சாலை ஆகியவை அருகே இது அமைந்துள்ளது. 

மானியம் இல்லாமல் ஈரறை ஃபெளக்ஸி வீடுகளுக்கு $176,000லிருந்தும்  நான்கறை வீடுகளுக்கு $484,000லிருந்தும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   

2006ஆம் ஆண்டு பீஷானில் முதியோருக்காக வடிவமைக்கப்பட்ட 176 ஸ்டூடியோ குடியிருப்புகள் அறிமுகமானபோது கடைசியாக புதிய குடியிருப்புகள் விற்பனைக்கு வந்தன. 

பீஷான் தவிர, அங் மோ கியோ, கேலாங், பாசிர் ரிஸ், தெம்பனிஸ் ஆகிய முதிர்ச்சியடைந்த நகரங்களிலும் முதிர்ச்சியடையாத நகரங்களான சுவா சூ காங், தெங்கா, உட்லண்ட்ஸ் ஆகியவற்றிலும் இந்தப் புதிய வீடுகள் அமைந்துள்ளன.

மே மாதத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தவற்றையும் சேர்த்து மொத்தம் 11 வீட்டுத் திட்டங்கள் விற்பனைக்கு அறிமுகம் கண்டுள்ளன.

இந்தச் சுற்றில் ஏற்கெனவே விற்பனைக்கு வந்தவற்றில் எஞ்சிய வீடுகளின் விற்பனை எதுவும் இல்லை.

சிங்கப்பூரின் புதிய குடியிருப்பான தெங்கா 1,044 வீடுகளைக் கொண்டது. சுவா சூ காங்கில் 571 வீடுகள் விற்பனைக்கு வருகின்றன.

புதிய வீட்டுக்கான விண்ணப்ப காலம் ஆகஸ்ட் 18ஆம் தேதியுடன்  முடிவடையும்.

இவ்வாண்டின் இரண்டாவது வீவக தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளில் விற்பனை இது.

அடுத்த வீட்டு விற்பனைத் திட்டம் நவம்பர் மாதத்தில் இடம்பெறும்.

பீஷான், செம்பவாங், தெம்பனிஸ், தெங்கா, தோ பாயோ ஆகிய நகரங்களின் அமையும் குடியிருப்புகள் இதில் அறிமுகம் காணும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon