லக்கி பிளாசா, பெனின்சுலா பிளாசாவில் இம்மாதம் 29ஆம் தேதி முதல் புதிய விதிமுறை வாரயிறுதி நுழைவு கட்டுப்பாடுகள்

இம்­மா­தம் 29ஆம் தேதி முதல் வார­யி­றுதி நாட்­களில் லக்கி பிளாசா, பெனின்­சுலா பிளாசா ஆகிய கடைத்­தொ­கு­தி­க­ளுக்­குச் செல்­வோர் தங்­கள் அடை­யாள அட்டை அல்­லது வேலை அனு­மதி அட்டை ஆகி­ய­வற்­றில் உள்ள கடைசி இலக்­கத்­தைப் பொறுத்து உள்ளே அனு­மதிக்­கப்­ப­டு­வார்­கள் என்­றும் அங்கு கூட்ட நெரி­ச­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் முயற்­சி­யாக இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தங்­கள் அடை­யாள அட்­டை­யின் கடைசி இலக்­க­மும் தேதி­யும் ஒற்­றைப்­படை எண்­ணாக இருந்­தால் அனு­மதி உண்டு. அதே­போல், அடை­யாள அட்­டை­யின் கடைசி இலக்­க­மும் தேதி­யும் இரட்­டைப்­படை எண்­ணாக இருந்­தால் அனு­ம­திக்­கப்­படும்.

இதன் தொடர்­பான மேல் விவ­ரங்­களை சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­க­மும் என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பும் விரை­வில் வெளி­யி­டும்.

வார­யி­று­தி­யில் இவ்­விரு கடைத்­தொ­கு­தி­க­ளி­லும் நுழை­வ­தற்கு நீண்ட வரி­சை­யில் மக்­கள் காத்­தி­ருக்­கின்­ற­னர் என்­றும் இந்­த­க் கூட்­டத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தவே புதிய விதி அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது என்று சுகா­தார அமைச்­சர் மான் கிம் யோங் நேற்று நடை­பெற்ற மெய்­நி­கர் அமைச்­சர்­நிலை பணிக்­கு­ழு­வின் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

“சிங்­கப்­பூ­ரின் நான்கு பிர­ப­ல­மான ஈரச்­சந்­தை­களில் அண்­மை­யில் மேற்­கொள்­ளப்­பட்­ட­தைப் போன்று இப்­போது இவ்­விரு கடைத்­தொ­கு­தி­களில் புதிய விதி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்,” என்­றும் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வரு மான திரு கான் விளக்­கி­னார்.

அதே செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய கல்வி அமைச்­ச­ரும் பணிக்­கு­ழு­வின் மற்­றோர் இணைத் தலை­வ­ரு­மான லாரன்ஸ் வோங், உண­வ­கங்­களில் ஒலிக்­கும் இசை மிக­வும் உரக்­க­மாக உள்­ளது என்­றும் அத­னால் அங்­குள்ள வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­கள் குரலை உயர்த்திப் பேச வற்­பு­றுத்­தப்­ப­டு­கின்­ற­னர் என்­றும் கூறி­னார்.

“மக்­கள் உரத்த குர­லில் பேசு­வ­தால் அவர்­கள் வாயி­லி­ருந்து வெளி­யா­கும் எச்­சில்­து­ளி­கள் கிரு­மித்­தொற்­றைப் பரப்­ப­லாம். ஆகவே, முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக எல்லா உண­வ­கங்­க­ளி­லும் ஒலிக்­கும் இசை மெது­வான பின்­னணி இசை­யா­கத்­தான் ஒலிக்க வேண்­டும்.

“தொலைக்­காட்சி, வானொ­லி­யில் இடம்­பெ­றும் நேர­டி­யாக ஒலிக்­கும் இசை­யும் நேரடி காணொளி ஒளி­ப­ரப்­பு­களும் இனி­மேல் அனு­ம­திக்­கப்­ப­டாது,” என்­றும் திரு வோங் விவ­ரித்­தார்.

மேலும் பேசிய திரு வோங், “ஓர் உண­வ­கத்­தில் தங்­க­ளின் குடும்ப உறுப்­பி­னர்­களும் நண்­பர்­களும் அதிக அள­வில் கூடு­வ­தற்கு ஏது­வாக அதிக மேசை­களை முன்­ பதிவு செய்­கின்­ற­னர்.

“இவ்­வாறு பெரிய எண்­ணிக்­கை­யி­லான மக்­கள் ஓர் உண­வ­கத்­தில் கூடுவதற்கு அதி­க­மான மேசை­களை முன்­ப­திவு செய்­வது இனி அனு­ம­திக்­கப்­ப­டாது. இவ்­வாறு முன்­ப­திவு செய்­யப்­ப­டு­வதை உணவு, பானக்­ கூட நடத்­து­நர்­கள் அனு­ம­திக்­கக்­கூ­டாது.

“ஒரு குடும்­பத்­தைச் சேர்ந்து ஐந்­துக்கு மேற்­பட்ட உறுப்­பி­னர்­கள் ஒரே இடத்­தில் உண­வுண்­ப­தற்கு அனு­மதி உண்டு. ஆனால் குடும்ப உறுப்­பி­னர்­கள் அல்­லா­த­வர்­க­ளுக்கு அனு­மதி இல்லை,” என்­றும் திரு வோங் விளக்­கி­னார்.

உணவு, பானக்­ கூ­டங்­களில் கொண்­டாட்­டங்­க­ளி­லும் விருந்­து­க­ளி­லும் மக்­கள் ஒன்­று­கூட அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்­கள். அவ்­வாறு கூடும்­போது மக்­கள் முகக்­க­வ­சம் இல்­லா­மல் பேசு­வ­தற்கு அதிக சாத்­தி­யம் உண்டு.

அம­லாக்க அதி­கா­ரி­கள் இந்த விதி­மு­றை­கள் உண­வ­கங்­களில் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வதை உறுதி செய்­வார்­கள் என்­றும் திரு வோங் கூறி­னார்.

திறந்­த­வெளி இடங்­களில் ஒருங்­கி­ணைந்த உடற்­ப­யிற்­சி­கள்

ஸ்போர்ட்­எஸ்ஜி விளை­யாட்டு மையங்­கள், வீவக பகு­தி­கள் ஆகி­ய­வற்­றில் உள்ள திறந்­த­வெளி இடங்­களில் இனி ஒருங்­கி­ணைந்த உடற்­பயிற்சி நட­வ­டிக்­கை­கள் செப்­டம்­பர் 1ஆம் தேதி முதல் அனு­ம­திக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த உடற்­ப­யிற்சி வகுப்­பு­கள் பயிற்­று­விப்­பா­ளர் ஒரு­வ­ரின் வழி­காட்­டு­த­லில் இடம்­பெற வேண்­டும். பங்­கேற்­பா­ளர்­க­ளுக்­குள் பாது­காப்­பான இடை­வெளி இருப்­ப­தை­யும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வ­தை­யும் அந்­தப் பயிற்­று­விப்­பா­ளர் உறுதி செய்ய வேண்­டும் என்­றும் அமைச்­சர் வோங் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!