‘இனம் தொடர்பான வேற்றுமைகளை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’

இனப் பாகு­பா­டற்ற சமூ­கத்­தையே அனை­வ­ரும் விரும்­பு­வார்­கள். அதில் இனப் பாகு­பாடு கிடை­யாது. அணு­கு­மு­றை­க­ளி­லும் நடை­மு­றை­க­ளி­லும் பார­பட்­சம் கிடை­யாது.

வேலை­க­ளுக்கு ஊழி­யர்­களை அமர்த்­தும்­போது தகு­திக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்டு சரி­யா­ன­வர்­கள் தேர்வு செய்­யப்­ப­டு­வார்­கள் என்று பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் மாலிக்கி ஒஸ்­மான் (படம்) தெரி­வித்­துள்­ளார்.

ஆனால், இம்­மா­தி­ரி­யான சமூ­கத்­துக்கு விருப்­பப்­ப­டு­தல், இனங்­க­ளுக்­கி­டையே உள்ள உண்­மை­யான வேறு­பா­டு­க­ளை­யும் சூழல்­களை­யும் பார்க்­கா­மல் இருந்து­ வி­டு­தல் ஆகி­யவற்றில் மக்­கள் குழப்­ப­ம­டைந்­து­வி­டக்­கூடாது என்­றும் அவர் விவ­ரித்­தார்.

“இனம் தொடர்­பில் ஒரு­வர் தெரி­விக்­கும் கருத்­து­கள் இனங்­க­ளுக்­கி­டையே சில சம­யங்­களில் கடு­மை­யான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­வி­டும் என்­ப­தில் சிங்­கப்­பூ­ரர்­கள் மெத்­த­ன­மாக இருந்­து­விடக்­கூ­டாது மற்­றும் குறைத்து மதிப்­பி­டக்­கூ­டாது என்­றும் கல்வி மற்­றும் வெளி­யு­றவு இரண்­டாம் அமைச்­ச­ரு­மான டாக்­டர் மாலிக்கி எச்­ச­ரித்­தார்.

அதி­பர் உரை மீதான விவா­தத்­தில் நேற்று பங்­கேற்று பேசிய அவர், “சிங்­கப்­பூ­ரர்­கள் அனைத்து இனங்­க­ளை­யும் மதித்து நடக்க வேண்­டும். அதுவே நமது நாட்­டின் இன மற்­றும் சமய நல்­லி­ணக்­கத்­தை­யும் பல கலா­சார பண்­பு­க­ளை­யும் கட்­டிக்­காக்­கும்.

“சிங்­கப்­பூ­ரில் நியா­ய­மான, சம­நி­லை­யான சமூ­கம் அமைய இந்­தப் பண்­பு­கள் முக்­கிய தூண்­க­ளாக விளங்­கும்,” என்று கூறிய டாக்­டர் மாலிக்கி, அதற்­குத் தேவை­யான முக்­கிய கொள்­கை­களாக மேற்­கு­றிப்­பி­டப்­பட்­ட­வற்­றைச் சுட்­டி­னார்.

“முத­லில், அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் சமூ­கத்தை உரு­வாக்க, இனங்­க­ளுக்­கி­டையே வேற்­று­மை­கள் இருப்­ப­தை­யும் அவற்றை ஆக்­க­பூர்­வ­மான வழி­களில் அணுக வேண்­டும் என்­ப­தை­யும் சிங்­கப்­பூ­ரர்­கள் ஒப்­புக்­கொள்ள வேண்­டும்.

“அவை கலா­சா­ரப் பாரம்­ப­ரி­யங்­கள், நடை­மு­றை­கள், முன்­னு­ரி­மை­களை வலி­யு­றுத்­து­தல் போன்­ற­வற்­றில் காணப்­படும் வேற்­று­மை­க­ளாக இருக்­க­லாம். அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் சமூ­கத்­தில் அங்­கம் வகிக்க சிங்­கப்­பூ­ரர்­கள் இந்த வேற்­று­மை­களை அடை­யா­ளம் கண்டு, அவற்றை மதித்து, புரிந்­து­கொண்டு, அவற்­றுக்கு ஏற்­ற­வாறு நடை­மு­றை­களில் மாற்­றங்­க­ளைச் செய்ய தயா­ராக இருக்க வேண்­டும்.

“இனம் அடிப்­ப­டை­யி­லா­ன அடை­யா­ளம் நடப்­பில் இருக்­க­வும் அதை மேம்­ப­டுத்­த­வும் சிங்­கப்­பூ­ரர்­கள் அனு­ம­தி­ய­ளிக்க வேண்­டும். சுய­உ­தவி அமைப்­பு­கள் உட்­பட சமூக அள­வி­லான திட்­டங்­க­ளுக்கு விரி­வான கொள்­கை­கள் இருப்­ப­தை­யும் உறுதி செய்ய வேண்­டும்.

“இது சமூ­கத்­தில் உள்ள பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கண்டு, உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு தகுந்த ஆத­ர­வை வழங்க ஏது­வாக இருக்­கும்,” என்­றும் அமைச்­சர் விளக்­க­ம­ளித்­தார்.

இனங்­க­ளுக்­கி­டையே உள்ள வேற்­று­மை­க­ளை முழு­மை­யாக உணர்ந்து அதன்­படி செயல்­ப­டு­ப­வரே உண்­மை­யான சிங்­கப்­பூ­ரர் என்று கூறிய டாக்­டர் மாலிக்கி, ஒரு­வர் தனது இனம் அடிப்­ப­டை­யி­லான அடை­யா­ளத்­தைக் கட்­டிக்­காக்­கும் அதே­வே­ளை­யில் சிங்­கப்­பூ­ரர் என்ற ஒரு­மித்த அடை­யா­ளத்­தை­யும் வெளிப்­ப­டுத்­து­வ­தில் எந்த உள்ளார்ந்த முரண்பாடும் இருக்­கப் போவ­தில்லை. இதுவே சிங்கப்பூர் கலாசாரத்தின் முக்கிய பண்புநலன் என்றும் தமது உரையில் வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!