உலக அரங்கில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் நிரஞ்சன்

ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வளர்க்கும் ‘ஆசியான்’ அமைப்பின் செயலவையின் இசைக்குழு ‘சி ஆசியான் கான்செனன்ட்’ (C ASEAN Consonant), 10 நாடுகளின் பாரம்பரிய இசையை ஒன்றிணைத்து படைத்து வருகிறது. இசைக்குழுவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிங்கப்பூரைப் பிரதிநிதித்து வருகிறார் புல்லாங்குழல் கலைஞர் நிரஞ்சன் பாண்டியன், 27. ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் ஆசியான் தினத்திற்காக இவ்வாண்டு இசைக்குழு தயாரித்த இசைக் காணொளி ஒன்றில் தன் இனிய புல்லாங்குழல் இசையை வழங்கினார் நிரஞ்சன்.

“ஆசியான் தின படைப்பில் பங்கேற்பது இது இரண்டாவது முறை. நேரடியாக பார்வையாளர்களிடம் வாசித்துக் காட்டும் அனுபவத்தைவிட இது வித்தியாசமாக உள்ளது,” என்றார் நிரஞ்சன். இவ்வாண்டின் இசைப் படைப்பு மெய்நிகராக இருந்ததில் சில சவால்களைச் சந்தித்ததாக குறிப்பிட்ட நிரஞ்சன், நேரடி நிகழ்ச்சி படைப்பது ஒரு நாளோடு முடிந்துவிடும் என்பதால் சுலபம் என்றார்.

“சிங்கப்பூரில் இருந்தவாறே எனது புல்லாங்குழல் இசைப் பதிவைத் தயாரித்து அனுப்பவேண்டும். இசைப் பதிவு தரமாக இருக்கவேண்டும். புதுமையான அனுபவமாக இருந்தாலும் சிங்கப்பூரை பிரதிநிதித்து ஈடுபடும் இந்த முயற்சியை எண்ணிப் பெருமையடைகிறேன்,” என்றார் நிரஞ்சன்.

இதற்கிடையே இந்திய இசையமைப்பாளர் திரு தயானந்த் பிறைசூடன் தயாரித்த ‘ஏ தயா மியூசிகல்’ (A Daya Musical) என்ற இசைத்தொகுப்பில் இடம்பெறும் ‘சிறகுடன்’, ‘ஏதோ என்னில் ஊறும்’ என்ற இரண்டு பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்துள்ளார் நிரஞ்சன். ‘ஏதோ என்னில் ஊறும்’ என்ற பாடலை ஆகஸ்ட் 19ஆம் தேதி நடிகர் விஷால் வெளியிட்டார். பின்னர் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடிகை ரித்விகா ‘சிறகுடன்’ பாடலை வெளியிட்டார்.

இந்த முயற்சியிலும் ஒரே சிங்கப்பூர் இசைக் கலைஞராக இடம்பெற்ற நிரஞ்சன், தமது நண்பரான திரு அஞ்சன் ராஜ்குமார் இந்த வாய்ப்பைப் பற்றி தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

“கொவிட்-19 நிலவி வரும் இந்த நேரத்தில் இசைப் பணிகளில் ஈடுபடுவது கடினம். இணையம்வழியும் அனைத்துலக அளவிலும் மேலும் பல முயற்சிகளில் ஈடுபட இந்த நேரத்தைப் பயன்படுத்தி வருகிறேன்,” என்றார் நிரஞ்சன். பிரபல இசைத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பாடல்களைக் கேட்கலாம். அத்துடன் உள்ளூர் குறும்படங்கள் சிலவற்றுக்கும் நிரஞ்சன் புல்லாங்குழல் வாசித்துள்ளார். இவரைப் பற்றிய மேல் விவரங்களுக்கு https://theflautistraaa.com/about/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!