சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூருக்கு உலக உறவும் மின்னிலக்கமயமும் அவசியம்

புத்­தாக்­க­மும் மின்­னி­லக்­க­மும் தொட­ரும் நிலை­யில் உல­கத் தொடர்­பு­கள் சிங்­கப்­பூ­ருக்கு இன்­றி­ய­மை­யா­தவை என கொள்­ளை­நோய் உணர்த்தி இருப்­ப­தாக தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் தெரி­வித்து உள்­ளார்.

“பல்­வேறு நாடு­களில் முடக்­க­நி­லை­யும் பாது­காப்பு இடை­வெ­ளி­யும் நடப்­பில் உள்­ளன. நாம் வாழும், வேலை செய்­யும் முறை­களும் மாற்று­வ­டி­வம் கண்­டுள்­ளன. ஏரா­ள­மா­னோர் இணை­யம் மூலம் பொருள் வாங்­கு­கின்­ற­னர். வர்த்­த­கங்­கள் வேக­மாக மின்­னி­லக்­கப் பாதைக்கு மாறு­கின்­றன. காணொளி உரை­யா­டல், இணை­யம் வழி கற்­றல், மெய்­நி­கர் கருத்­த­ரங்­கு­கள் போன்­ற­வை­யும் வழக்­க­மான நிகழ்­வு­க­ளாக மாறி வரு­கின்­றன.

“இவற்­றைப் பார்க்­கை­யில், வர்த்­த­கங்­களும் தனிப்­பட்ட மனி­தர்­க­ளும் மின்­னி­லக்­கத் திற­னைக் கொண்­டி­ருக்க வேண்­டிய கட்­டா­யத்தை கொவிட்-19 ஏற்­ப­டுத்தி உள்­ளது என்றே கரு­த­லாம்.

“எதிர்­கால வளர்ச்­சிக்­கும் போட்­டித்­தன்­மைக்­கும் வர்த்­த­கங்­கள் மின்­னி­லக்­கத்தை அடித்­த­ள­மாக அமைத்­துக்­கொள்ள வேண்டி உள்­ளது. ஒவ்­வொரு நாடும் இதே­போல இயங்­க­வேண்­டிய நிலை­யும் ஏற்­பட்டு உள்­ளது,” என்று திரு ஈஸ்­வ­ரன் தெரி­வித்து உள்­ளார்.

டிபி­எஸ் மின்­னி­லக்க தினத்தை முன்­னிட்டு மெய்­நி­கர் உரை நிகழ்த்­திய அவர், மின்­னி­லக்­க­ம­யத்­துக்கு மாறு­வது என்­பது கொள்­ளை­நோ­யின் குறு­கி­ய­கால சவால்­களை வெற்­றி­கொள்­வது மட்­டு­மல்­லாது நீண்­ட­கால பொரு­ளி­யல் அனு­கூலங்­களை அடை­ய­வும் கைகொ­டுக்­கும் என்­றார்.

“உல­கச் சந்­தை­யு­டன் தொடர்­பு­ கொள்ள, வாடிக்­கை­யா­ளர் தளத்தை விரி­வு­ப­டுத்த வர்த்­த­கங்­க­ளுக்கு மின்­னி­லக்­க­ம­யம் உத­வும். எனவே தங்­க­ளது வளங்­களை மாற்­றி­ய­மைத்து தொழி­லுக்­குப் புத்­து­யி­ரூட்ட அத்­த­கைய வாய்ப்­பு­களை நமது வர்த்­த­கர்­கள் பற்­றிக்­கொள்ள வேண்­டும்,” என்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon