50 நிமிட பயணத் தாமதத்திற்கு பழுதடைந்த ரயில் காரணம்

கிழக்கு-மேற்கு எம்­ஆர்டி ரயில் தடத்­தில் அல்­ஜு­னிட்­டுக்­கும் பாசிர் ரிஸ்­ஸுக்­கும் இடைப்­பட்ட பகு­தி­யில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு சுமார் 50 நிமிடங்களுக்குப் பய­ணத் தடை ஏற்­பட்­டது.

அன்று இரவு 7.08 மணிக்கு எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் தனது டுவிட்­டர் பக்­கத்­தில் 25 நிமிட தாம­தம் இருக்­கும் என கூறி­யது.

பின்­னர் 7.31 மணிக்கு பதி­வேற்­றப்­பட்ட தக­வ­லில் ரயில் சேவை கொஞ்­சம் கொஞ்­ச­மாக வழக்­க­நிலைக்­குத் திரும்­பிக் கொண்­டி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இறு­தி­யாக, ரயில் பயணச் சேவை முற்­றி­லும் மீண்­டு­விட்­ட­தாக இரவு 7.52 மணிக்கு எஸ்­எம்­ஆர்டி கூறி­யது.

முன்­ன­தாக, பாதிக்­கப்­பட்ட பய­ணி­க­ளுக்கு உதவ பூகிஸ் நிலை­யத்­திற்­கும் பாசிர் ரிஸ் நிலை­யத்­திற்­கும் இடைப்­பட்ட தூரத்­திற்கு இல­வ­சப் பேருந்துச் சேவை­கள் விடப்­பட்­டுள்­ள­தாக எஸ்­எம்­ஆர்டி அறி­வித்­தி­ருந்­தது.

சம்­ப­வம் குறித்து நேற்று அந்­நி­று­வ­னம் விளக்­கம் அளித்­தது.

ஜூரோங் ஈஸ்ட்டை நோக்­கிய வழித்­த­டத்­தில் உள்ள பாய லேபார் எம்­ஆர்டி நிலை­யம் அருகே செவ்­வாய்க்­கி­ழமை மாலை 6.45 மணி­ய­ள­வில் ரயில் ஒன்­றில் பழுது ஏற்­பட்­ட­தா­க­வும் ரயில் சேவை தாம­தத்­திற்கு அதுவே கார­ணம் என்­றும் ‘ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்­தித்­தா­ளி­டம் எஸ்­எம்­ஆர்டி கூறி­யது.

“எத­னால் பழுது ஏற்­பட்­டது என்­பதை விசா­­ரிக்க அந்த ரயில் உட­ன­டி­யாக சேவை­யி­லி­ருந்து மீட்­டுக்­கொள்­ளப்­பட்டு பணி­ம­னைக்கு அனுப்­பப்­பட்­டது.

“பய­ணி­க­ளின் சிர­மத்­தைக் குறைக்க இல­வ­சப் பேருந்துச் சேவை விடப்­பட்­டது.

“மேலும் ரயில்­க­ளிலும் நிலை­யங்­க­ளி­லும் சேவை தாம­தம் குறித்த அறி­விப்­பு­கள் உட­னுக்­கு­டன் செய்­யப்­பட்­டன. நீண்ட நேரம் பய­ணம் செய்ய நேர்ந்த­தற்­காக மன்­னிப்­புக் கேட்­டுக்­கொள்­கி­றோம்,” என எஸ்­எம்­ஆர்டி பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!