சிங்கப்பூரில் கிருமித்தொற்றைவிட தேர்வுகள் பற்றியே மாணவர்கள் கவலை

சிங்­கப்­பூர் மாண­வர்­கள் கிரு­மித்­தொற்­றைக் காட்­டி­லும் பள்­ளித் தேர்­வு­கள் பற்­றியே அதிக கவலை கொள்­வ­தாக ஆய்வு ஒன்று கண்­ட­றிந்­துள்­ளது.

ஆய்­வில் பங்­கெ­டுத்த 10 பிள்­ளை­களில் எழு­வர் பள்­ளித் தேர்­வு­கள் குறித்து, கோபம், கவலை, வருத்­தப்­ப­டு­வது என தங்­கள் உணர்­வு­களை வெளி­யிட்­டுள்­ள­னர்.

மேலும், இதில் ஐந்­தில் மூவ­ருக்கு மேல் கவ­லை­ய­டைந்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஒப்­பு­நோக்க, 10ல் அறு­வர் கொரோனா கிரு­மித்­தொற்று குறித்து அமைதி, பாது­காப்­பாக இருப்­பது, நம்­பிக்கை போன்ற உணர்­வு­க­ளைக் கொண்­டி­ருப்­ப­தாக ஆய்வு முடி­வு­கள் தெரி­விக்­கின்­றன.

இந்த ஆய்­வில் 1,050 பள்ளி மாண­வர்­கள் பங்­கேற்ற நிலை­யில் ஆய்­வின் முடி­வு­கள் நேற்று வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆய்­வின் முடி­வு­கள் பள்­ளித் தேர்­வு­கள், அதில் மாண­வர்­கள் பெறக்­கூ­டிய தேர்ச்சி ஆகி­ய­வற்­றுக்கே சிங்­கப்­பூர் மாண­வர்­கள் அதிக அள­வி­லான முக்­கி­யத்­து­வம் வழங்­கு­வ­தாக எடுத்­துக் காட்டு­கின்­றன.

“ேதர்­வு­கள் ஓர­ளவு கவ­லை­யைத் தரக்கூடியது என்றாலும், இது கவ­னிக்­கப்­ப­டா­விட்­டால், தேர்­வு­கள் குறித்து அதி­கம் கவலை கொள்­வது பதற்­றத்­துக்கு இட்­டுச் செல்­லும். அத்­து­டன் இது மாண­வர்­க­ளின் கல்­வித் திறனை பாதிப்­ப­து­டன் வேறு வகை­யான பதற்­றம், மன அழுத்­தம், மன­ந­லப் பிரச்­சி­னை­கள் போன்­ற­வற்­றுக்கு இட்­டுச் செல்­லும்,” என்று இந்த ஆய்வை மேற்­கொண்ட ‘ஃபோக்கஸ் ஆன் ஃபேமிலி’ என்ற அற­நி­று­வ­னம் கூறு­கிறது.

தேர்­வு­கள் குறித்த இந்த பதற்­றத்தை மாண­வர்­க­ளுக்கு அவர்­கள் தரக்­கூ­டிய ஆத­ரவு எதிர்­மறை­யான பாதிப்­பு­களை குைறக்­க­ வல்­லது என்­றும் இந்த ஆய்வு விளக்கு­கிறது.

எதிர்­வ­ரும் பள்­ளித் தேர்­வு­கள் குறித்து கவ­லைப்­படும் ஐந்­தில் மூன்று மாண­வர்­கள் தங்­க­ளுக்கு நீடித்த பெற்­றோர் ஆத­ரவு இல்லை என்று கூறு­வ­தாக ஆய்வு தெரி­விக்­கிறது.

“பள்ளி மாண­வர்­கள் தங்­க­ளது கல்­வித் திறன் தொடர்­பில் கடும் நெருக்­க­டியை எதிர்­கொள்­கின்­ற­னர் என்­பதை ஆய்வு முடி­வு­கள் காட்­டு­கின்­றன. இதில் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு ஒன்­று­மில்லை.

“அவர்­க­ளுக்கு பெற்­றோர் அன்­றாடத் தேவை­களை மட்­டுமே பூர்த்தி செய்­வ­து­டன் நில்­லா­மல் அவர்­க­ளின் உணர்­வுபூர்­வ­மான தேவை­க­ளுக்­கும் அவர்கள் கவ­னம் செலுத்த வேண்­டும்,” என்று இந்த அற­ நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி திரு­வாட்டி ஜோவனா கோ ஹோ கூறு­கி­றார்.

மேலும், ஆய்­வில் பங்­கேற்ற 10ல் ஏழு மாண­வர்­க­ளுக்­கும் அதி­க­மா­னோர் தாங்­கள் தாய், தந்தை இரு­வ­ரு­ட­னும் பாசப் பிணைப்­பில் இருப்­ப­தா­கக் கூறி­னர்.

அதி­லும், 13லிருந்து 15வய­து

உை­டய மாண­வர்­க­ளை­விட 10லிருந்து 12 வய­துக்­குட்­பட்ட மாண­வர்­களே தங்­கள் பெற்­றோ­ரு­டன் நெருங்­கிய பாசப் பிணைப்­பில் இருப்­ப­தாக தெரி­வித்­த­னர்.

இந்த ஆய்வு ஆண்­டு­தோ­றும் இடம்­பெ­றும் பிள்­ளை­கள் தின இயக்­கத்­தின் ஒரு பகு­தி­யாக ஃபோக்கஸ் ஆன் ஃபேமிலி நிறு­வ­னம் மேற்­கொண்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!