சுடச் சுடச் செய்திகள்

வேலை தொடர்பான கேள்விகளை ‘முரசிடம் கேளுங்கள்’

கொவிட்-19 கிரு­மித்­தொற்று உல­கத்­தையே உலுக்­கி­விட்­டது.

தற்­போ­தைய நடை­முறை வாழ்க்­கை­யில் நாம் பல மாற்­றங்­க­ளு­டன் வாழும் கட்­டா­யத்­தில் உள்­ளோம்.

பழக்­கப்­பட்ட வியா­பா­ரங்­கள், வேலை­கள் சில மறைந்­து­விட்ட நிலை­யில் புதிய அணு­கு­மு­றை­யுடன் செயல்­படும் போக்கு உரு­வா­கும்.

சில தொழில் துறை­கள் மற்­ற­வற்­றை­விட அதிக பாதிப்பைச் சந்தித்து உள்­ளன.

ஆனால் அர­சாங்­கத்­தின் வேலை ஆத­ரவுத் திட்­டங்­க­ளின் வழி, வேலை தேடு­வோர் மாற்று துறை­களில் புதிய வேலை வாய்ப்­பு­க­ளைத் தேடிச் செல்­ல­லாம்.

தற்­போ­தைய சூழ­லில் தங்­க­ளுக்கு ஏற்ற வேலையைத் தேட சிலர் சிர­மங்­களை எதிர்­கொள்­ள­லாம். இதனால் மனம் தளர வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

எதிர்­பார்ப்­பு­களை சரிப்­ப­டுத்தி, ஏதா­வது வித்­தி­யா­ச­மான அல்­லது பழக்­க­மில்­லாத பாதையை தேர்ந்­தெ­டுக்­கும்­போது, உங்­க­ளது திறன்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்ள அல்­லது மாற்று திறன்­க­ளைப் பெற எடுக்­கும் முதல் படி அது­வா­கும்.

அப்­பா­தை­யில் பய­ணிக்க, புதிய வேலை வாய்ப்­பு­களும் தோன்­றும்.

விடா­மு­யற்­சி­யு­டன் ஆக்கபூர்வ மான ­சிந்­த­னையை நிலை­நாட்டி, இப்­பா­தையை மேற்­கொள்ள விரும்­பு­வோ­ரு­டன் அர­சாங்­க­மும் இணைந்து பய­ணிக்­கும்.

வேலை ஆத­ரவு உதவித் திட்­டங்­கள் மற்­றும் சேவை­கள் வழி, சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­கள் திறன்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான பயிற்சி பெற அர­சாங்­கம் போதிய வாய்ப்­பு­களை வழங்­கும்.

பொரு­ளா­தா­ரம் சீர­டை­யும்­போது, நல்ல வேலை வாய்ப்­பு­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரர்­கள் தயா­ராக இருப்­பதை இது உறு­தி­செய்­யும்.

எஸ்ஜி ஒற்­றுமை வேலை­கள், திறன்­க­ளுக்­கான தொகுப்­புத்­திட்­டம் (SGUnited Jobs and Skills Package) வழி, கிட்­டத்­தட்ட 100,000 வேலை, பயிற்சி வாய்ப்­பு­கள் உள்­ளன.

இதில் குறு­கியகால, நிரந்­தர வேலை­கள் உட்­பட, புதி­தாக வேலை தேடும் பட்­ட­தா­ரி­க­ளுக்கு வேலை பயிற்சி திட்­டங்­களும் உள்­ளன.

ஒரு துறை­யி­லி­ருந்து மற்­றொன்­றுக்கு மாற விரும்­பு­வோ­ருக்கு ஆத­ர­வாக வாழ்க்­கைத்­தொ­ழில் மாற்­றும் திட்­டம் (PCP) நடப்­பில் உள்­ளது.

இதன்வழி, புதிய துறை­யில் வேலை அனு­ப­வம் இல்­லா­த­வர்­க­ளுக்கு பயிற்சி கொடுக்­கப்­பட்டு, சம்­ப­ளம், பயிற்சிப் படித்­தொகை ஆகி­ய­வற்­றுக்கு அர­சாங்க ஆத­ர­வும் கிடைக்­கிறது.

வேலை தேடு­வ­தில் சிர­மங்­களை எதிர்­கொண்­டால், www.mycareersfuture.gov.sg/careercoaching எனும் இணை­யப் பக்­கத்­திற்குச் செல்­ல­லாம்.

அதோடு சிங்­கப்­பூர் ஊழி­ய­ரி­ணி­யின் Careers Connect நிலை­யங்­க­ளுக்­குச் சென்று ஆலோ­ச­னை­யும் பெற­லாம்.

இவை தெம்­ப­னிஸ், உட்­லண்ட்ஸ், பாய லேபார் பகு­தி­களில் அமைந்துள்­ளன. மேலும், சமூக மன்­றங்­கள் போன்ற தீவி­லுள்ள 24 வாழ்க்­கைத்­தொ­ழில் நிலை­யங்­க­ளி­லும் (Career Centres) ஆலோ­சனை பெற­லாம்.

வேலை வாய்ப்பு தொடர்­பில் ஏதா­வது கேள்­வி­கள் உள்­ள­னவா?

‘முர­சி­டம் கேளுங்­கள்’ என்ற புதிய கேள்வி பதில் தொட­ரு­டன் எங்­க­ளோடு இணைக.

உங்­கள் ஐயங்­களை தீர்க்க சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி, கேள்­வி­கள் சில­வற்­றுக்குப் பதி­ல­ளிக்­கும்.

கேள்விகளை tamilmurasu@sph.com.sg எனும் இணைய முகவரிக்கு அனுப்புங்கள்.

அடுத்த மாதம் 9ஆம் தேதி பதில்களுடன் உங்களை சந்திக்கிறோம்!

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon