எளியோர் நீதி நாடும் முறையில் மேம்பாடு: நிபுணர்கள் யோசனை

குற்றமிழைத்ததாக நீதிமன்றத்தில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டாலோ அல்லது வழக்குத் தொடுக்கப்பட்டாலோ அது தொடர்பாக யாரைச் சென்று பார்ப்பது என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.

குற்ற வழக்குகளுக்கான இலவசச் சட்ட உதவி மையங்களில் இலவச ஆலோசனை மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையிலும் அவற்றைப் பற்றிப் பலருக்கும் தெளிவில்லை.

உதாரணமாக, வெளிநாட்டு ஊழியர் நிலையம் அதுபோன்ற ஒரு சட்ட ஆலோசனை நிலையத்தை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் மற்றம் மூன்றாவது சனிக்கிழமைகளில் அது இயங்குகிறது என்பது தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்.

இம்மாதத் தொடக்கத்தில் முன்னாள் இந்தோனீசிய பணிப்பெண் பார்தி லியானி தொடர்புடைய வழக்கிற்குப் பின்னர் சட்ட உதவியை நாடுவது குறித்த விவகாரம் பரவலாகப் பேசப்பட்டது. 2016ஆம் ஆண்டு தமது முதலாளியால் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்ட பார்தி இம்மாதம் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

அவருக்காக அனில் பால்சந்தானி என்னும் இலவச சட்ட உதவி வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார். பணிப்பெண்ணின் முதலாளிகள் சாங்கி விமான நிலையக் குழுமத்தின் முன்னாள் தலைவர் லியு மன் லியோங்கும் அவரது குடும்பத்தினரும் என்பது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர்ந்த எளிய மக்களுக்கான மனிதாபிமான அமைப்பு என்று பொருள்படும் ‘ஹோம்’ என்னும் அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) இந்த இலவசச் சட்ட உதவியும் வழக்கறிஞரும் கிடைக்க அந்தப் பெண்ணுக்கு உதவியது.

இவ்விவகாரம் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை கேள்வி எழுப்பத் தூண்டியது. குறிப்பாக பாட்டாளிக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சில்வியா லிம், குற்றவியல் நீதி அமைப்பின் சமத்துவம் குறித்து மன்றத்தில் பேச அனுமதி கோரியுள்ளார். மேலும், பார்தி வழக்கு எழுப்பி இருக்கும் விவகாரங்கள் குறித்த அமைச்சர்நிலை அறிக்கை ஒன்றைத் தாம் வெளியிடப்போவதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் குறிப்பிட்டிருந்தார்.

சட்ட உதவித் திட்டங்கள் பற்றிய அறியாமை எளிய மக்கள் நீதியைப் பெறுவதற்குத் தடையாக இருக்கக்கூடும் என என்ஜிஓக்களும் வழக்கறிஞர்களும் கருத்துத் தெரிவித்து உள்ளனர். சட்ட உதவி அலுவலகம் போன்றவை வாங்கும் உதவித் திட்டங்களுக்கு அவர்கள் தகுதி பெற முடியாமலும் போகலாம்.

எல்லா நிபந்தனைகளுக்கும் மேலாக ஒருவர் சட்ட உதவிக்கான விண்ணப்பத்தை அளிப்பதற்கு முந்திய 12 மாதங்களில் அவரது குடும்பத்தின் சராசரி தனிநபர் மாத வருமானம் $950 அல்லது அதற்குக் கீழ் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இந்த அலுவலகத்தின் சட்ட உதவி என்பது தகுதியுள்ள சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் வழங்கப்படுகிறது.

பார்தி வழக்கின் சட்டப் போராட்டத்திற்கு எல்எஸ்பிபிஎஸ் என்னும் இலவச சட்ட சேவைச் சங்கத்தின் குற்றவியல் சட்ட உதவித் திட்டத்தின்கீழ் ஆதரவு வழங்கப்பட்டது.

வழக்கறிஞர் அனில் இலவசமாக வாதிடாமல் இருந்திருந்தால் இவ்வழக்கிற்கான பணிப்பெண்ணின் செலவு $150,000ஆக இருந்திருக்கும். வசதியற்றோருக்கும் தேவை உள்ளோருக்கும் குற்றவியல் சட்ட உதவி வழங்கக்கூடிய இந்தத் திட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். சட்ட உதவி நாடி கடந்த ஈராண்டுகளில் இத்திட்டத்திற்கு விண்ணப்பத்தோரில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எல்எஸ்பிபிஎஸ் பேச்சாளர் சண்டே டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!