(காணொளி:) அங் மோ கியோவில் தீப்பிடித்த கார்

அங் மோ கியோவிலுள்ள திறந்தவெளி கார் நிறுத்தும் இடத்தில் கார் ஒன்று கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தீ பிடித்தது. இரவு நேரத்தில் அங் மோ கியோ அவென்யு 3 புளோக் 201ல் அந்தக் கார் தீ பிடித்ததாக பிரெட்டி என்பர் ஸ்டாம்ப் செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

“என்ன நடந்ததென்று எனக்குச் சரியாக தெரியவில்லை. ஆனால் அந்த இடத்தில் இரண்டு கார்கள் தீப்பற்றின. ஒருசிலர் தீயணைக்க முயன்றதையும் நான் கண்டேன்,” என்று அவர் கூறினார்.

உதவிக்கான அழைப்பு இரவு 10.55 மணிக்கு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இந்தச் சம்பவத்தின் தொடர்பில் எவரும் காயமடையவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!