மருமகனைக் கொன்றவருக்கு 8 ஆண்டு, 6 மாத சிறை

தெலுக் ஆயர் ஸ்தி­ரீட்­டில் இருக்­கும் ஒரு காப்­பி கடைக்கு வெளியே மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன் பட்­டப்­ப­க­லில் பலர் முன்­னி­லை­யில் தன் மரு­ம­க­னைக் கத்­தி­யால் குத்­திக் கொலை செய்த 72 வயது மாம­னா­ருக்கு எட்­டரை ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டு உள்­ளது.

டான் நாம் செங் என்ற அந்த முதி­ய­வர் மீது தொடக்­கத்­தில் கொலைக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது. பிறகு அவ­ரின் மன­நிலை மருத்­துவ அறிக்­கை­யைத் தொடர்ந்து நோக்­க­மற்ற மர­ணம் விளை­வித்த குற்­றச்­சாட்­டா­கக் குறைக்­கப்­பட்டு தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

வழக்கு விசா­ர­ணை­யில், குற்­ற­வா­ளிக்கு 12 ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கும்­படி அர­சி­னர் தரப்பு வாதிட்­டது. ஆனால் தன் கட்­சிக்­கா­ர­ரின் வய­தைக் கருத்­தில் கொண்டு அவ­ருக்கு கொடுக்­கப்­படும் தண்­டனை ஆயுள் தண்­டனை அள­வுக்கு இருக்­கக்­கூ­டாது என்­ப­தால் ஏழரை ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கும்­படி குற்­ற­வா­ளி­யின் தரப்பு வாதிட்­டது.

இந்த விவ­கா­ரம் பற்றி பல விவ­ரங்­கள் விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டன.

டான் நாம் செங்­கிற்கு மூன்று புதல்­வி­கள். அவர் 1974ல் டிஎன்­எஸ் ஷிப்­பிங் என்ற நிறு­வ­னத்தை ஏற்­ப­டுத்­தி­னார். தொழில் பல்­வேறு நிறு­வ­னங்­க­ளா­கப் பல்­கிப் பெரு­கி­யது. மூன்று புதல்­வி­களும் தொழி­லைப் பார்த்­துக்­கொண்­ட­னர்.

டானின் மூத்த புதல்­வி­யான ஷைலர் டான் என்­ப­வரை 2005ல் ஸ்பென்­சர் துப்­பானி என்­ப­வர் மணம் செய்­து­கொண்­டார்.

மாம­னார் தொழிலை மரு­ம­க­னும் கவ­னித்­துக்­கொண்­டார்.

டானின் நிறு­வ­னங்­கள் எல்­லாம் டிஎன்ஸ் ஓஷியன் லைன்ஸ் என்ற பெய­ரில் ஒன்று சேர்க்­கப்­பட்­டன.

இந்த நிறு­வ­னம் 2016ல் பெரிய நிறு­வ­னக் குழு­மத்­தி­டம் விற்­கப்­பட்­டது. அதற்கு துப்­பா­னியே தலைமை நிர்­வா­கி­யாக பொறுப்பு ஏற்­றார். இந்த விற்­ப­னையை துப்­பா­னி­தான் உத்­தே­சித்து இருந்­தார். புதிய நிறு­வ­னத்­தில் தனது பங்கு அதி­க­ரிக்க வேண்­டும் என்­ப­தால் மாம­னார், தன் மனைவி இரு­வ­ரி­டத்­தி­லும் பேசி அவர்­க­ளின் பங்­கு­களைத் தன் பெய­ருக்கு துப்­பானி மாற்­றிக்­கொண்­டார்.

மாம­னா­ரின் பங்­கு­க­ளுக்­குப் பதி­லாக அவ­ருக்கு $450,000 கொடுக்­கப்­பட்­டது. ஆனால் மாமனா ருக்கு மன­நி­றைவு இல்லை.

இந்­நி­லை­யில், துப்­பா­னிக்கு வேறு ஒரு பெண்­ணு­டன் தொடர்பு உண்டு என்­ப­தும் அந்­தப் பெண் மூலம் அவ­ருக்கு இரண்டு பிள்ளை கள் உண்டு என்­ப­தும் 2017ல் தெரி­ய­வந்­தது.

இத­னி­டையே, துப்­பா­னிக்­கும் அவ­ரின் மனை­வி­யான ஷைலர் டானுக்­கும் இடை­யில் மண­வி­லக்கு இணக்­கம் ஏற்­பட்­டது. ஆனா­லும் மூன்று பிள்­ளை­களை யார் வளர்த்து உரு­வாக்­கு­வது போன்ற விவ­கா­ரங்­களில் இருவருக்­கும் இடை­யில் பிரச்­சினை இருந்து வந்­தது.

மனை­விக்­கும் தனக்­கும் இடை­யில் நடந்த பேச்சை எல்­லாம் துப்­பாணி ஒலிப்­ப­திவு சாத­னத்­தில் பதிந்து வந்­த­தைக் கண்­டு­பி­டித்த மாம­னார், இதை மண­வி­லக்கு வழக்­கில் துப்­பாணி தனக்கு சாதக மாகப் பயன்­ப­டுத்த திட்­ட­மி­டு­கி­றார் என்று சந்­தே­கப்­பட்­டார்.

இந்­தச் சூழ­லில், 2017 ஜூலை 4ஆம் தேதி மாம­னார் டானின் இளைய மகள் ஷெர்ரி நிறு­வ­னத்­தில் இருந்து நீக்­கப்­பட்­டார். நிறு­வ­னத்­தில் எல்லா பங்­கு­களை­யும் எடுத்­துக்கொண்டு, தன் மூத்த மகளை மண­வி­லக்கு செய்துவிட்டு துப்­பானி ஏமாற்­றப் பார்க்­கி­றார் என்று மாம­னார் நம்­பி­னார்.

மாம­னார் டான் 2017 ஜூலை 10ஆம் தேதி செசில் கோர்ட்­டில் இருந்த அலு­வ­ல­கத்­துக்­குச் சென்று­கொண்டு இருந்­தார்.

அப்­போது வழி­யில் தெலுக் ஆயர் ஸ்திரீட்­டில் துப்­பா­னி­யைப் பார்த்­தார். அலு­வ­ல­கம் போன டான் அங்கு சாப்­பாட்­டுக்­ கூ­டத்­தில் இருந்த ஒரு கத்­தியை எடுத்து பையில் வைத்­துக்­கொண்டு காப்பிக் கடைக்­குச் சென்று அங்கு இருந்த துப்­பா­னி­யிடம் ‘நீ மகா மோசம்’’ எனச் சொல்லி அவ­ரைக் குத்தினார்.

பூன் டாட் ஸ்தி­ரீட்­டில் துப்­பானி மயங்கி விழுந்­தார். அங்­கி­ருந்­த­வர்­க­ளி­டம், ‘இவர் எனது மரு­மகன்­தான். யாரும் உதவி செய்­யா­தீர், சாகட்­டும்’ என்று டான் சொன்­னார். பிறகு நடந்­ததை தன் புதல்­வி­யிட­மும் அவர் கூறி­யதாக விசாரணை யில் தெரிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!