நினைவுச் சின்னங்களில் மெய்நிகர் சுற்றுலா

கம்­போங் கிளா­மில் உள்ள தேசிய நினை­வுச்­சின்­ன­மான சுல்­தான் பள்ளி­வா­ச­லில் இருந்து 23 கிலோ­மீட்­டர் தொலை­வில் இருக்­கும் சிஹுவா தொடக்­கப் பள்ளி மாண­வர்­கள் தங்­க­ளது வகுப்­ப­றை­யில் இருந்­த­வாறே நேற்று அந்த வழி­பாட்­டுத் தலத்தை மெய்­நி­கர் முறை­யில் சுற்­றிப் பார்த்­த­னர்.

பள்ளி மாண­வர்­கள் தேசிய நினை­வுச் சின்­னங்­க­ளைச் சுற்­றிப் பார்க்­கும் வித­மாக, தேசிய மர­பு­டைமைக் கழகம் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி மேற்­கொண்டு வரும் சோதனை முயற்­சி­யின் ஒரு பகு­தி­யாக இந்­நி­கழ்வு இடம்­பெற்­றது.

‘மொபைல் டெலி­பி­ர­சன்ஸ் ரோபோ’ என அழைக்­கப்­படும் தொலை­வி­யக்­கக் கரு­வி­யால் இயக்­கப்­படும் நக­ரும் கணி­னித்­தி­ரை­யின் உத­வி­யு­டன் மாண­வர்­கள் அந்த மெய்­நி­கர் சுற்­று­லா­விற்­குச் சென்று வந்­த­னர்.

சுற்­றுப்­ப­யண வழி­காட்டியான திரு ராபர்ட் சான், 70, சுல்­தான் பள்­ளி­வா­ச­லில் அந்த இயந்­திர மனி­த­னு­டன் இருக்க, கணி­னி­துணை­கொண்டு மாண­வர்­கள் அச்­சா­த­னத்தை இயக்­கி­னர். மாண­வர்­க­ளின் கேள்­வி­களுக்கும் திரு சான் பதி­லு­ரைத்­தார்.

அந்த இயந்­திர மனி­த­னின் துணை­யு­டன் மாண­வர்­கள் அந்தப் பள்ளிவாசலின் பல பகு­தி­க­ளை­யும் அதன் கட்­ட­டக்­க­லை­யை­யும் கண்டு மகிழ்ந்­த­னர்.

பள்­ளி­க­ளுக்­காக இத்­த­கைய முயற்சி இடம்­பெற்­றது இதுவே முதன்­முறை.

“சிங்­கப்­பூ­ரின் செழு­மை­மிக்க மர­பு­டை­மையை, அது­வும் இப்­போ­தைய நெருக்­க­டி­யான கால­கட்­டத்­தில் மாண­வர்­கள் கண்­டு­ணர இந்த மெய்­நி­கர் நேரடி சுற்­றுலா அற்­பு­த­மா­ன­தொரு வழி. சிங்­கப்­பூ­ரை­யும் அதைத் தாண்­டி­யும் கண்­ட­றிந்­து­கொள்ள மாண­வர்­க­ளுக்கு இத்­த­கைய மெய்­நி­கர் அனு­ப­வங்­கள் புதிய கத­வு­க­ளைத் திறந்து விடு­கிறது,” என்­றார் சிஹுவா தொடக்­கப் பள்­ளி­யின் முதல்­வர் திரு­மதி லீ ஹுய் ஃபெங்.

தேசிய மர­பு­டைமைக் கழகத்­தின் மற்­றொரு திட்­டத்­தின்­கீழ் இந்த இயந்­திர மனி­தன் சன் யாட் சென் நினை­வ­கத்­தி­லும் இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தி­லும் இப்­போ­தைக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது. முதுமை, உடல்­ந­லக் குறைவு, உடற்­குறை, நட­மாட்­டப் பிரச்­சி­னை­கள் போன்­றவை கார­ண­மாக மர­பு­டை­மைச் சுற்­றுலா செல்ல முடி­யா­த­வர்­க­ளுக்­கு உதவ இந்தத் திட்டம் இலக்கு கொண்­டுள்­ளது.

இந்த ‘நினை­வுச் சின்ன ரோபோ சுற்­று­லாக்­கள் திட்­டத்தை’ சிஹுவா, எட்ஜ்­ஃபீல்டு தொடக்­கப் பள்­ளி­களில் சோதித்­துப் பார்த்து வரு­கி­றோம் என்­றும் அக்­டோ­ப­ரில் இருந்து மற்ற அனைத்து தொடக்­கப் பள்­ளி­களும் உயர்­நி­லைப் பள்ளி­களும் இத்­த­கைய சுற்­று­லா­விற்­குப் பதிவு செய்­ய­லாம் என்­றும் மர­பு­டைமைக் கழகத்தின் துணைத் தலைமை நிர்­வாகி திரு ஆல்­வின் டான் தெரி­வித்­தார்.

“மாண­வர்­கள் பள்­ளி­களிலேயே இருக்­கு­மாறு ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர். இத­னால் நமது தேசிய நினை­வுச் சின்­னங்­க­ளுக்கு வழக்­க­மாக அவர்­கள் மேற்­கொள்­ளும் கற்­றல் பய­ணங்­கள் இடம்பெறாமல் போகலாம். இதைக் கருத்­தில்­கொண்டே இந்த மெய்நிகர் சுற்றுலா திட்டத்தை உரு­வாக்­கி­னோம்,” என்­றார் திரு டான்.

சுல்­தான் பள்­ளி­வா­ச­லு­டன் முன்­னாள் ஃபுல்லர்ட்­டன் கட்­ட­டம், சிசெட்-எல் யூதக் கோவில் போன்ற நினை­வுச் சின்­னங்­களும் அடுத்த ஆண்டு இத்­திட்­டத்­தில் சேர்க்­கப்­படும். காலம் வரும்­போது, சிங்­கப்­பூ­ரின் 73 நினை­வுச் சின்­னங்­களில் மேலும் பல இந்த மெய்­நி­கர் சுற்­று­லாப் பட்­டி­ய­லில் இணை­யும் என கழகம் நம்­பு­கிறது.

ஆர்­வ­மு­டைய பள்­ளி­கள் அடுத்த மாதத்­தில் இருந்து இந்த 45 நிமிட மெய்­நி­கர் சுற்­று­லா­விற்கு NHB_NationalMonuments@nhb.gov.sg எனும் மின்­னஞ்­சல் முக­வரி மூல­மா­கப் பதிவு செய்­ய­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!