ஜயன்ட் பேரங்காடிகளில் 650 பொருள்களுக்குச் சராசரியாக 20% விலைக்கழிவு

ஜயன்ட் பேரங்காடிக் குழுமம் அன்றாடம் தேவைப்படக்கூடிய 650 பொருள்களை சராசரியாக 20% விலை குறைத்து விற்கத் தொடங்கி இருக்கிறது.

இந்த விலைக்குறைப்பு நடவடிக்கை அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

இதனால் ஜயன்ட் குழுமத்திற்குக் கிட்டத்தட்ட $17 மில்லியன் செலவாகும். எடுத்துக்காட்டாக, நூறு கிராம் ‘வன்னமை’ இறால் மீனின் விலை $1.89 என்ற விலையில் இருந்து ஒரு வெள்ளியாகவும் 50 பொட்டலங்கள் கொண்ட ‘ஓஎஸ்கே’ பசுந்தேயிலையின் விலை $6.95லிருந்து $5 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

பேரங்காடிக்கு உள்ளேயே அடுமனை (பேக்கரி), கார்டியன் மருந்தகம் எனத் தீவு முழுவதுமுள்ள தனது 53 ஜயன்ட் கடைகளும் புதுப்பொலிவு காணவுள்ளன.

ஏறக்குறைய 2,000 புதிய பொருள்கள் ஜயன்ட் பேரங்காடிகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

அத்துடன், ஒரு வெள்ளிக்கு விற்கப்படும் பொருள்கள் பிரிவு, பொறித்த கோழி விற்கும் கடை ஆகிய அம்சங்களும் அப்பேரங்காடிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!