மணமுறிவின் பாதிப்பைக் குறைக்க இணையவாசல்: பொதுமக்களிடமிருந்து கருத்து சேகரிக்கப்படும்

மன­மு­றி­வுக்கு விண்­ணப்­பிப்­பது பற்றி யோசிக்­கும் தம்­ப­தி­க­ளுக்கு, குறிப்­பாக பிள்­ளை­கள் உள்ள தம்­ப­தி­க­ளுக்கு மேலும் ஆத­ர­வ­ளிக்க, சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து கருத்து சேக­ரிக்­கிறது.

நேற்று தொடக்­கம், நவம்­பர் 28ஆம் தேதி வரை, மன­மு­றி­வுக்கு விண்­ணப்­பிப்­பது பற்றி யோசிக்­கும் தம்­ப­தி­க­ளுக்கு உத­வும் புதிய இணை­ய­வா­ச­லில் என்­னென்ன அம்­சங்­கள் உள்­ள­டக்­கப்­ப­ட­லாம், திரு­ம­ணப் பந்­தங்­க­ளைக் காப்­பாற்­றக்­கூ­டிய வழி­வ­கை­கள் போன்­றவை பற்றி சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டம் அமைச்சு கருத்து சேக­ரிக்­கும்.

இந்த முயற்­சி­யில், ஏற்­கெ­னவே மண­மு­றி­வைக் கடந்து வந்­த­வர்­கள், மன­மு­றி­வுக்கு விண்­ணிப்­பிப்­பது பற்றி யோசிக்­கும் ஆனால் இன்­னும் அதற்­கு­ரிய நட­வ­டிக்­கையை எடுக்­கா­த­வர்­கள் என 100 சிங்­கப்­பூ­ரர்­கள் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள்.

இதன் தொடர்­பில் நேற்று அறிக்கை வெளி­யிட்ட அமைச்­சின் சார்­பில் கருத்­து­ரைத்த அதன் பேச்­சா­ளர், “குடி­மக்­க­ளின் யோச­னை­க­ளை­யும் கருத்­து­க­ளை­யும் கருத்­தில் கொண்டு, புதிய இணை­ய­வா­ச­லில் உள்­ள­டக்­கக்­கூ­டிய அம்­சங்­களை அமைச்சு முடிவு செய்­யும்.

“இணை­ய­வா­ச­லில் உள்ள அம்­சங்­கள் மண­மு­றி­வுக்­குப் பிந்­திய விளை­வு­க­ளைத் தம்­ப­தி­கள் எவ்­வாறு சமா­ளிக்­க­லாம், குறிப்­பாக பெற்­றோ­ரின் மண­மு­றி­வால் பெரி­தும் பாதிக்­கப்­படும் பிள்­ளை­க­ளுக்கு எவ்­வாறு ஆத­ர­வ­ளிக்­க­லாம் போன்­ற­வற்­றுக்கு விளக்­க­ம­ளிக்­கும்,” என்­றார்.

புதிய இணை­ய­வா­சல் 2021ஆம் ஆண்டு இறு­திக்­குள் தயா­ரா­கி­வி­டும் என்­றும் குறிப்­பிட்ட அமைச்சு அந்த இணை­ய­வா­ச­லுக்கு ஒரு பெயர் வைக்­க­வும் யோச­னை­களை வர­வேற்­கிறது.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம், மத்­திய சேம நிதி போன்ற இணை­ய­வா­ச­லில் உள்ள தக­வ­லும் வளங்­களும் மண­மு­றிவு பெறும் தம்­ப­தி­க­ளுக்கு பய­னுள்­ள­தாக அமை­யும்.

மேலும், தம்­ப­தி­கள் தங்­கள் மண­வாழ்க்­கை­யில் நிலை­மை­யை­யும் தங்­கள் பிள்­ளை­யின் தேவை­க­ளைப் புரிந்­து­கொள்­ள­வும் உத­வு­வ­து­டன் இணை­யம் வழி ஆலோ­சனை ஆத­ர­வுச் சேவை­யும் இணை­ய­வா­ச­லில் வழங்­கப்­படும்.

சிங்­கப்­பூ­ர் தம்­ப­தி­க­ளு­ட­னான சந்­திப்­பு­க­ளுக்­குப் பிறகு, அமைச்சு ஷரியா நீதி­மன்­றத்­து­டன் இணைந்து பணி­யாற்றி, முஸ்­லிம் தம்­ப­தி­க­ளுக்­கான ஷரியா நீதி­மன்­றத்­தின் இணை­ய­வா­ச­லில் தேவை­யான தக­வல்­களை சேர்க்­கும்.

அதே­வே­ளை­யில் ஷரியா நீதி­மன்­றம், முயிஸ் எனப்­படும் சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றத்­து­டன் அணுக்­க­மா­கப் பணி­யாற்றி, சிங்­கப்­பூர் மலாய்/முஸ்­லிம்­க­ளுக்­குத் தேவை­யான தக­வல்­கள் தனது இணை­ய­வா­ச­லில் இருப்­பதை உறுதி செய்­யும்.

அமைச்­சின் அறிக்­கை­யில் கருத்­து­ரைத்­தி­ருந்த சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் சூலிங், “எங்­க­ளால் முடிந்­த­வரை திரு­ம­ணங்­க­ளைக் காப்­பாற்­றவே விரும்­பு­கி­றோம்.

“வேறு வழி­யின்றி மண­மு­றிவு நிகழ வேண்­டும் என்ற கட்­டா­யம் ஏற்­ப­டும்­போது, மண­மு­றி­வால் அவர்­க­ளின் பிள்­ளை­க­ளின் நல்­வாழ்வு குறித்து பெற்­றோர் என்ற முறை­யில் அவர்­கள் நல்ல முடி­வெ­டுக்க நாங்­கள் உத­வு­வோம்.

“மண­மு­றி­வால் அனைத்­துத் தரப்­பி­ன­ருக்­கும், குறிப்­பாக அவர்­களில் பிள்­ளை­க­ளுக்கு ஏற்­படும் நீண்­ட­கால விளை­வு­கள், குறித்து தெளி­வாக விளக்க அமைச்சு ஆன அனைத்து முயற்­சி­க­ளை­யும் மேற்­கொள்­ளும்,” என்­றும் தெரி­வித்­தார்.

இது பற்றி கருத்து கூற விரும்பு வோர் msf_fdg@msf.gov.sg எனும் மின்­னஞ்­ச­லில் தெரி­விக்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!