சமூக அளவில் ஒருவர் உட்பட 27 பேருக்கு கிருமித்தொற்று

சிங்கப்பூரில் மேலும் 27 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது. அவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 57,742ஆக உள்ளது.

சமூக அளவில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த ஒன்பது பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து வந்த அறுவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களில் இருவர் சிறுவர்கள்.

ஒன்று, மூன்று வயதுகளில் உள்ள அவர்கள் இம்மாதம் 15ஆம் தேதி இந்தியாவிலிருந்து இங்கு வந்தனர்.

மற்ற இருவர் இம்மாதம் 16ஆம் தேதி இந்தியாவிலிருந்து இங்கு வந்தனர். அவர்களில் ஒருவர் சிங்கப்பூர் நிரந்தரவாசி. மற்றொருவர் வேலை அனுமதி அட்டைதாரர்.

வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த எஞ்சிய இருவரில் ஒருவர் பிரான்சிலிருந்து இங்கு வந்தார். வேலை அனுமதிச் சீட்டு வைத்து இருக்கும் மற்றொருவர் பிலிப்பீன்சிலிருந்து இங்கு வந்ததாக அமைச்சு தெரிவித்தது.

மேற்கூறப்பட்ட அந்த அறுவருக்கும் வீட்டில் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. உத்தரவை நிறைவேற்றிய காலத்தில் அவர்களுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!