மின்னிலக்கப் போட்டித்தன்மை: சிங்கப்பூருக்கு இரண்டாமிடம்

மின்னிலக்கப் போட்டித்திறன் மிக்க நாடாக சிங்கப்பூர் இரண்டாவது நிலையைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

டென்மார்க், சுவீடன், ஹாங்காங் ஆகிய நாடுகள் அடுத்த மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

சுவிட்சர்லாந்தின் ‘நிர்வாக மேம்பாட்டு நிலையம்’ எனும் வர்த்தகக் கல்வி நிலையம், நான்காவது ஆண்டாக ‘உலக மின்னிலக்கப் போட்டித் தன்மை பட்டியலை’ வெளியிட்டு இருக்கிறது.

பொருளியல் உருமாற்றத்தை முடுக்கிவிடுவதில் எந்த அளவிற்கு மின்னிலக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன என்பதைக் கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கம்.

மொத்தம் 63 நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

அறிவாற்றல், தொழில்நுட்பம், எதிர்காலத்திற்கு ஆயத்தமாக இருத்தல் ஆகிய மூன்று காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் மின்னிலக்கப் போட்டித்திறன் மதிப்பிடப்பட்டது.

கடந்த முறையைப் போலவே இவ்வாண்டிலும் அறிவாற்றல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் சிங்கப்பூர் சிறந்த நிலையைப் பெற்றது.

அறிவாற்றலில் இரண்டாம் இடத்தையும் தொழில் நுட்பத்தில் முதலிடத்தையும் சிங்கப்பூர் பிடித்தது.

ஆயினும், எதிர்காலத்திற்கு ஆயத்தமாக இருத்தலில் கடந்த ஆண்டில் 11வது இடத்தில் இருந்த சிங்கப்பூர், இம்முறை இன்னும் ஓரிடம் கீழிறங்கி 12வதாக வந்தது.

கடந்த ஜூனில் வெளியான ‘போட்டித்தன்மைமிக்க பொருளியலை’ கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!