ஆகக் குறைவான தொற்று எண்ணிக்கை; புதிதாக ஆறு பேருக்கு கொவிட்-19

சிங்கப்பூரில் புதிதாக அறுவருக்கு கொவிட்-19 இருப்பதாக இன்று சனிக்கிழமை நண்பகல் அளவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் சமூகத்தில் இருப்பவர்; நான்கு பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.

இவ்வாண்டு மார்ச் 5ஆம் தேதிக்குப் பிறகு ஒரு நாளில் பதிவான ஆகக் குறைவான தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இதுதான் . சமூக அளவில் பாதிக்கப்பட்ட அந்த ஒருவர் சிங்கப்பூரர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதனுடன் சிங்கப்பூரில் கிருமித்தொற்று மொத்த பாதிப்பு 57,800ஆக உயர்ந்துள்ளது. மேல் விவரங்கள் இன்றிரவு வெளியிடப்படும்.

நேற்று வெள்ளிக்கிழமையன்று பத்து புதிய கொவிட் -19 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன. அவர்களில் ஒருவர் சமூகத்தில் இருப்பவர்; ஐவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அந்த ஐவரில் ஒருவர் சிங்கப்பூரர், ஒருவர் நிரந்தரவாசி, ஒருவர் ‘சார்ந்திருப்போர் அட்டை’ வைத்திருப்பவர். கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட எஞ்சிய நால்வர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று அமைச்சு கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!