விதிமீறல் தொடர்பில் 14 பொதுக் கேளிக்கை வர்த்தகங்கள் சிக்கின

லிட்­டில் இந்­தியா, ஜாலான் புசார் உள்­ளிட்ட பல வட்­டா­ரங்­க­ளி­லுள்ள மொத்­தம் 14 பொதுக் கேளிக்கைக் கூடங்­கள் கொவிட்-19 தொடர்­பான விதி­மு­றை­கள், மது­பான உரிம விதி­மு­றை­கள், அல்­லது இரண்­டை­யும் மீறி­ய­தன் தொடர்­பில் போலி­சா­ரி­டம் சிக்­கி­ உள்­ளன.

சைனா­ட­வுன், சென்ட்­ரல் மால், புகிஸ், ஜாலான் புசார் மற்­றும் லிட்­டில் இந்­தி­யா­வி­லுள்ள பொதுக் கேளிக்கைக் கூடங்­கள் மற்­றும் உடற்­பி­டிப்பு நிலை­யங்­களில் மத்­திய போலிஸ் பிரிவு நடத்­திய ஒரு மாத சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது இந்­தக் குற்­றங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக போலி­சார் நேற்று தெரி­வித்­த­னர். அந்த 14 இடங்­க­ளி­லும் இன்­ன­மும் விசா­ரணை தொடர்­கிறது.

அத்­து­டன் 21 உடற்­பி­டிப்பு நிலை­யங்­கள் விதி­மு­றை­களை மீறி­யி­ருப்­ப­தும் போலி­சா­ரின் சோதனை நட­வ­டிக்­கை­யில் தெரிய வந்துள்ளது. இவற்­றில் 14 நிலை­யங்­கள், உரி­மம் இன்றி இயங்­கிக்­கொண்­டி­ருந்­தன. மற்ற ஐந்து நிலை­யங்­களும் உடற்­பி­டிப்­புச் சேவை தொடர்­பான விதி­மு­றை­களை மீறி­யி­ருந்­தன.

உரி­மம் இல்­லாத ஐந்து உடற்­பி­டிப்பு நிலை­யங்­களில் பாலி­யல் சேவை­கள் சட்­ட­வி­ரோ­த­மாக வழங்­கப்­பட்­டன.

உடற்­பி­டிப்பு நிலை­யங்­கள் மீதான சோத­னை­யில் 19 பேர் அதி­கா­ரி­க­ளி­டம் அகப்­பட்­ட­னர்.

வெளி­நாட்டு ஊழி­யர் வேலை நிய­ம­னச் சட்­டத்­தின் கீழ் அறு­வர் குற்­றம் புரிந்­தி­ருந்­த­னர்.

மேலும் மூவர், வெளி­நாட்டு ஊழி­யர் வேலை நிய­ம­னச் சட்­டம், குடி­நு­ழை­வுச் சட்­டம் ஆகி­ய­வற்­றின் கீழ் குற்­றம் புரிந்­த­தற்­காக கைது செய்­யப்­பட்­ட­னர்.

மாதர் சாச­னத்­தின் கீழ் குற்­றம் புரிந்­த­தற்­காக ஐந்து பெண்­கள் கைது செய்­யப்பட்­ட­னர்.

அவர்­கள் 28 வய­துக்­கும் 38 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அத்­து­டன் மாதர் சாச­னம், வெளி­நாட்டு ஊழி­யர் வேலை நிய­ம­னச் சட்­டம் ஆகி­ய­வற்­றின் கீழ் குற்­றம் புரிந்­த­தாக மேலும் நான்கு பெண்­கள் கைதா­கி­னர். இவர்­கள் 30 வய­துக்­கும் 40 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் ஆ­வர்.

அர­சாங்க ஊழி­ய­ரின் பணிக்கு இடை­யூ­றாக இருந்து வன்­செ­ய­லில் ஈடு­பட்ட 39 வயது ஆட­வர் ஒரு­வ­ரும் கைது இவர்­க­ளு­டன் செய்­யப்­பட்­டார்.

இத்­த­கைய விதி­மீ­றல் தொடர்­பில் சிக்­கும் வர்த்­த­கங்­க­ளுக்கு எதி­ரா­கக் கடு­மை­யான நட­வடிக்கை எடுக்­கப்­படும் என்று போலி­சார் தெரி­வித்­துள்­ள­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!