20 குற்றச்சாட்டுகள்: ரஷ்ய ஆடவருக்குச் சிறை

பெண்ணை மான­பங்­கம் செய்­தது, போலிஸ் அதி­காரி உட்­பட இரு­வரைக் கொன்­று­வி­டு­வ­தாக மிரட்­டி­யது உள்­ளிட்ட பல குற்­றச் செயல்­க­ளைப் புரிந்த ரஷ்ய ஆட­வருக்கு 18 வார சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

ஆண்ட்ரே லரி­ய­னோவ், 40, என்ற அந்த ஆட­வர் மீது மொத்­தம் 20 குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

மற்­ற­வர்­க­ளைக் கொலை­செய்து விடு­வ­தாக மிரட்­டல் விடுத்­தது தொடர்­பில் இரு குற்­றச்­சாட்­டு­கள், மான­பங்­கம், பொது இடத்­தில் சண்­டை­யிட்­ட­தன் மூலம் பொது அமை­தி­யைக் குலைத்­தது, போலிஸ் சொத்­தைச் சேதப்­ப­டுத்­தி­யது, இன்­னொ­ரு­வர் மீது எச்­சில் துப்­பி­யது, பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களை மீறி­யது என மொத்­தம் ஏழு குற்­றச்­சாட்­டு­களை அவர் கடந்த மாதம் ஒப்­புக்­கொண்­டி­ருந்­தார்.

கம்­போங் ஜாவா சாலை­யில் இருக்­கும் தங்­ளின் போலிஸ் வட்­டா­ரத் தலை­மை­ய­கத்­தின் காவ­லர் இல்­லத்­தில் நிர்­வா­ண­மா­கத் தோன்­றி­யது உள்­ளிட்ட அவர் மீதான மேலும் 13 குற்­றச்­சாட்­டு­க­ளைத் தண்­டனை விதிக்­கு­முன் மாவட்ட நீதி­பதி கிறிஸ்­ட­ஃபர் கோ கவ­னத்­தில் கொண்­டார்.

கடந்த ஆண்டு டிசம்­பர் 7ஆம் தேதி கிளார்க் கீயில் உள்ள ஒரு மன­ம­கிழ் மன்­றத்­தில் 36 வய­துப் பெண் ஒரு­வரை லரி­ய­னோவ் மான­பங்­கம் செய்­த­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் காட்­டின. பின்­னர், அவ­ரிடம் அநாகரிகமாகவும் நடந்து கொண்டார்.

இதையடுத்து, அந்தப் பெண் போலி­சுக்­குத் தக­வல் தந்­தார். சம்­பவ இடத்­திற்கு வந்த போலி­சா­ரு­டன் லரி­ய­னோவ் ஒத்­து­ழைக்க மறுத்­தார். தம்­மைப் பற்­றிய விவ­ரங்­க­ளைக் கூற மறுத்­த­தோடு, போலிஸ் அதி­கா­ரி­களில் ஒரு­வ­ரைக் கொன்­று­வி­டு­வ­தா­க­வும் அவர் மிரட்­டி­னார்.

இதைத் தொடர்ந்து, லரி­ய­னோவ் கைது செய்­யப்­பட்டு, பின்­னர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார்.

இவ்­வாண்டு ஏப்­ரல் 20ஆம் தேதி ஆர்ச்­சர்ட் பிளா­சா­வுக்கு லரி­ய­னோவ் சென்­றி­ருந்­தார். அச்­ச­ம­யத்­தில் அவர் முகக்­க­வ­சம் அணிந்­தி­ரா­த­தைக் கண்ட அக்­க­டைத்­தொகு­தி­யின் துணை வளாக மேலா­ளர், அவரை முகக்­க­வ­சம் அணி­யும்­படி சொன்­னார். அதற்கு இணங்­கா­மல் அவரை முரட்­டுத்­த­ன­மாக எதிர்­கொண்ட லரி­ய­னோவ், அவர் மீது எச்­சில் துப்­பி­னார். அத்­து­டன் நில்­லாது, “இது ரஷ்­யா­வாக இருந்­தி­ருந்­தால் உன்­னைச் சுட்­டு இ­ருப்­பேன்,” என்­றும் மிரட்­டி­னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!