குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த 1,300 பாலர் பள்ளி சிறார்களுக்கு உதவி

குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த சுமார் 1,300 பாலர் பள்ளி சிறு­வர்­க­ளுக்­குக் கூடு­தல் உதவி வழங்­கப்­ப­ட­வுள்­ளது. நவம்­பர் மாதம் முதல் அவர்­களின் பிள்ளை மேம்­பாட்டு கணக்­கில் (சிடிஏ) $250 சேர்க்­கப்­படும்.

கல்வி அமைச்சு, இட்­டன்­ஹ­வுஸ் சமூக நிதி, சிங்­கப்­பூர் சமூக அற­நி­று­வ­னம் ஆகி­ய­வற்­றின் கூட்­டணி­யில் இந்­தத் திட்­டம் தொடங்­கப்­பட்­டுள்­ளது.

வெள்­ளிக்கு வெள்ளி என்று அர­சாங்­க­மும் பங்­க­ளிக்­கும் என்று பங்­கா­ளித்­துவ அமைப்­பு­கள் நேற்று வெளி­யிட்ட ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தக் கூடு­தல் $250 செலுத்­தும் திட்­டம் அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்­குத் தொட­ரும். அதன்­படி, தகு­தி­பெ­றும் பிள்­ளை­களின் கணக்­கில் $500 வரை ஓராண்­டில் செலுத்­தப்­படும். மூன்று ஆண்­டு­களில் மொத்­தம் $1,500 கணக்­கில் ெசலுத்­தப்­படும்.

குறிப்­பிட்ட ஏழு பாலர் பள்ளி நிறு­வ­னங்­க­ளுக்­குக் கீழ் இயங்­கும் பாலர் பள்­ளி­களில் பயி­லும் பிள்­ளை­கள் இத்­திட்­டத்­திற்­குத் தகு­தி­பெ­ற­லாம். அவர்­கள் சிங்­கப்­பூ­ர­ராக இருப்­ப­து­டன் மொத்த மாதாந்­திர குடும்ப வரு­மா­னம் $4,500க்கும் குறை­வாக இருக்க வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

2018ஆம் ஆண்­டில் தொடங்­கப்­பட்ட மாண­வர் வாழ்க்கை மேம்­பாடு, குடும்ப ஊக்­கு­விப்­புப் பணிக்­குழு (அப்­லி­ஃப்ட்), இத்­திட்­டம் உரு­வாக உத­வி­யது. கல்வி இரண்­டாம் அமைச்­ச­ரும் அப்­லி­ஃப்ட் திட்­டத் தலை­வ­ரு­மான மாலிக்கி ஒஸ்­மான், ‘இ-பிரிஜ்’ பொங்­கோல் லார்ஜ் பிள்ளை பரா­ம­ரிப்பு நிலை­யத்­திற்கு நேற்று சென்று இத்­திட்­டத்­தைத் தொடங்கி வைத்­தார்.

பிள்­ளை­க­ளின் எதிர்­கா­லத்­துக்கு ஆரம்­பக் கல்­வி­யின் முக்­கி­யத்­துவம் குறித்து அவர் நிகழ்­வில் வலி­யுறுத்­திப் பேசி­யி­ருந்­தார்.

“ஒரு பிள்­ளை­யின் ஒட்­டு­மொத்த வளர்ச்­சிக்கு அடித்­த­ளம் இடு­வ­தில் பாலர் பள்ளி முக்­கி­யப் பங்­காற்­று­கிறது. ஒரு பிள்­ளை­யின் தன்­னம்­பிக்கை மற்­றும் சமூ­கத் திறன்­களை வளர்ப்­ப­து­டன் அவர்­க­ளைத் துடிப்­பு­மிக்க, ஆர்­வ­முள்ள மாண­வர்­களாக்­க­வும் பாலர் பள்ளி ஊக்­கு­விக்­கிறது,” என்­றார் அவர்.

கூடு­தல் தொகையை இத்­திட்­டம் வழங்­கு­வ­தால் தங்­க­ளின் குழந்­தை­க­ளைப் பாலர் பள்­ளிக்கு அனுப்ப மேலும் அதி­க­மான குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­கள் முன்­வ­ரு­வர் என்று தாம் எதிர்­பார்ப்­ப­தா­க­வும் டாக்­டர் மாலிக்கி தெரி­வித்­தார். குழந்தை போனஸ் திட்­டத்­தின் ஒரு பகு­தி­தான் ‘சிடிஏ’. இதில் உள்ள தொகை­யைப் பாலர் பள்­ளிக் கட்­ட­ணங்­கள், மருத்­து­வக் கட்­ட­ணங்­கள் போன்ற பிள்ளை வளர்ப்­புச் செல­வு­க­ளுக்­கா­கப் பயன்­ப­டுத்­த­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!