'சிங்கப்பூருக்கு ஜப்பானியர்கள் பயணம் மேற்கொள்ளலாம்'

'சிங்கப்பூருக்கு ஜப்பானியர்கள் பயணம் மேற்கொள்ளலாம்'

1 mins read
58b7643b-79ee-41ea-b913-b3c20987e5d5
படம்: இபிஏ -

சிங்கப்பூர் உட்பட 12 நாடுகள், வட்டாரங்களுக்கு ஜப்பானியர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள ஜப்பான் அடுத்த மாதம் அனுமதிக்க உள்ளதாக 'யொமியூரி' செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது. சீனா, தைவான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, வியட்னாம், நியூசிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளும் ஜப்பானின் பட்டியலில் உள்ளதாக யொமியூரி கூறியிருந்தது.

தற்போது 159 நாடுகள் மற்றும் வட்டாரங்களுக்குப் பயணத் தடை விதித்துள்ள ஜப்பானிய அரசாங்கம், குறிப்பிட்ட இந்த 12 நாடுகளுக்குத் தேவையற்ற, அவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்த்துவிடுமாறு பயணிகளுக்குப் பரிந்துரை செய்யும். இந்நிலையில் குடியிருப்பு தகுதியுடைய ஜப்பானியர்கள் மற்றும் வெளிநாட்டு தேசிய வர்த்தகப் பயணிகளை அனுமதிக்க ஜப்பான் திட்டமிடுவதாக 'நிக்கெய்' தெரிவித்துள்ளது.