ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை: பெண்ணுக்கு 5 மாத சிறைத் தண்டனை

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை: பெண்ணுக்கு 5 மாத சிறைத் தண்டனை

1 mins read
13024198-418c-46e2-a88a-c1cab194a236
2019 ஜூலை 2ஆம் தேதி நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நட்டாலி சியோவ். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கடைத்தொகுதி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருக்கும் 'நாட்டி கேர்ள் கிளப்' என்ற மதுபான விடுதியில் சென்ற ஆண்டு ஜூலை 2ஆம் தேதி சதீஷ் நோயல் கோபிதாஸ், 31, என்பவர் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் டான் சென் யாங், டான் ஹோங் ஷெங், லூ பூன் சோங், சான் ஜியா ஸிங், ஜோயல் டான் யுன் ஷெங், ஆங் டா யுவான், நட்டாலி சியோ யூ ஸென் ஆகியோர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது.

இவர்களில் ஜோல் டான், ஆங், நட்டால் சியோவ் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டு தாக்குதல் குற்றச்சாட்டாகக் குறைக்கப்பட்டது.

ஆங்கிற்கு எட்டு மாதச் சிறையும் ஆறு பிரம்படியும் விதிக்கப்பட்டது. ஜோயல் டானுக்கு நான்கு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருந்த ஒரே ஒரு பெண்ணான நட்டாலி சியோவுக்கு இன்று ஐந்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

டான் சென் யாங், 28, இன்னமும் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருக்கிறார். லூ, சான், டான் ஹோங் ஷெங் ஆகிய மூவருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது.