சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே பாதுகாப்பான பயண ஏற்பாடுகள்

சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தோ­னீ­சி­யா­வுக்­கும் இடையே பாது­காப்­பான பயண ஏற்­பா­டு­க­ளைத் தொடங்­கு­வது குறித்து இரு நாடு­களும் அறி­வித்­துள்­ளன.

இந்­தப் பயண ஏற்­பா­டு­கள் தொடர்­பி­லான பேச்­சு­வார்த்தை முடி­வ­டைந்­துள்­ள­தா­க­வும் அவற்­றுக்­கான விண்­ணப்­பங்­கள் இம்­மா­தம் 26ஆம் தேதி தொடங்­கும் என்­றும் இரு நாடு­களும் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தப் பாது­காப்­பான பயண ஏற்­பா­டு­கள், இரு நாடு­க­ளுக்­கும் இடையே அத்­தி­யா­வ­சிய வர்த்­தக, அதி­கா­ர­பூர்­வ பய­ணங்­களை மேற்­கொள்ள வழி­வ­குக்­கும்.

இந்­தோ­னீ­சியக் குடி­மக்­கள், சிங்­கப்­பூ­ரர்­கள் மற்­றும் நிரந்­த­ர­வா­சி­கள் இந்­தப் பய­ணங்­களை மேற்­கொள்ளத் தகுதி பெறு­வர்.

சிங்­கப்­பூர் தரப்­பி­லி­ருந்து இந்தப் பயண ஏற்­பா­டு­கள் தொடர்­பான விண்­ணப்­பங்­க­ளுக்கு இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் அல்­லது நிறு­வ­னங்­கள் ஆத­ரவு நல்க வேண்­டும் என்று இந்­தோ­னீ­சிய வெளி­யு­றவு அமைச்­சர் ரெட்னோ மர்­சுடி நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

இந்­தோ­னீ­சியக் குடி­நு­ழை­வுப் பிரி­வி­டம் அவர்­கள் இணை­யம்­ வழி விசா­வுக்கு விண்­ணப்­பிக்க வேண்­டும்.

சிங்­கப்­பூ­ருக்கு வரும் இந்­தோ­னீ­சி­யர்­கள், சிங்­கப்­பூர் அர­சாங்க அமைப்பு ஒன்று மற்­றும் இங்­குள்ள நிறு­வ­னம் ஒன்­றி­ட­மி­ருந்து தங்­க­ளது விண்­ணப்­பங்­களில் ஆத­ரவைப் பெற்­றி­ருக்க வேண்­டும் என்று திரு­மதி ரெட்னோ கூறி­னார்.

இந்­தோ­னீ­சி­யர்­கள் விசா­வுக்கு விண்­ணப்­பிக்க தேவை­யில்லை. மாறாக, ‘பாது­காப்­பான பயண அட்டை’ ஒன்­றுக்கு அவர்­கள் விண்­ணப்­பிக்க வேண்­டும் என்­றார் திரு­மதி ரெட்னோ.

இரு நாடு­களும் பரஸ்­பர அடிப்­ப­டை­யில் ஏற்­றுக்­கொண்­டு உள்ள கொவிட்-19 தடுப்பு, பொதுச் சுகா­தார நடை­மு­றை­களுக்­குப் பய­ணி­கள் உட்­பட்டு நடக்க வேண்­டும். பய­ணங்­களுக்கு முன்­னும் பின்­னும் கொவிட்-19 பரி­சோ­த­னை­க­ளுக்கு அவர்­கள் உட்­பட வேண்­டும் என இரு நாடு­களும் தெரி­வித்­தன.

பய­ணங்­க­ளுக்கு முந்­தைய பரி­சோ­தனை புறப்­பாட்­டிற்கு 72 மணி நேரத்­திற்­குள் நடத்­தப்­பட வேண்­டும்.

இந்­தப் பாது­காப்­பான பயண ஏற்­பா­டு­கள் குறித்த மேல் விவ­ரங்­கள் கூடிய விரை­வில் அறி­விக்­கப்­படும் என்று இரு நாட்டு வெளி­யு­றவு அமைச்­சு­கள் தெரி­வித்­தன.

இந்­தோ­னீ­சி­யா­வில் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­மாக இருந்­தும், இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான பொரு­ளி­யல் பங்­கா­ளித்­து­வத்­தைக் கருத்­தில்­கொண்டு இந்­தோ­னீ­சி­யா­வு­டன் பயண ஏற்­பா­டு­க­ளைத் தொடங்க சிங்­கப்­பூர் முடி­வெ­டுத்து இருக்­க­லாம் என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சாவ் சுவீ ஹாக் பொதுச் சுகா­தா­ரப் பள்­ளித் தலை­வ­ரான பேரா­சி­ரி­யர் டியோ யிக் யிங் கூறி­னார்.

இந்­தோ­னீ­சி­யா­வி­லி­ருந்து வரு­ப­வர்­கள் மூலம் இங்கு கொவிட்-19 பர­வு­வ­தற்­கான அபா­யம் குறித்து சிங்­கப்­பூர் அறிந்­துள்­ள­தைச் சுட்­டிய அவர், பய­ணங்­க­ளுக்கு முன்­னும் பின்­னும் பரி­சோ­த­னை­களை நடத்­து­வ­தன் மூலம் சமூ­கத்­தில் நோய் தொற்றும் சாத்­தி­யத்­தைக் குறைக்க முடி­யும் என்று சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!