ஆதரவு மானியத்திற்காக பெரும்பாலான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்

ஆதரவு மானியத்திற்காக பெரும்பாலான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்

1 mins read
dffdc7c9-9389-43d8-b312-33377eb445fe
நாடாளுமன்ற விவாதத்திற்கு இடையே பிரதமர் லீ சியன் லூங் முக்கிய உரையாற்றுவார். விவாதம் தொடங்குவதற்கு முன், எதிர்க்கட்சித் தலைவரான திரு பிரித்தம் சிங்கிற்கு இருக்கும் கடமைகள் மற்றும் சிறப்புரிமைகள் குறித்து அவைத் தலைவர் இந்திராணி ராஜா அமைச்சர்நிலை அறிக்கையை வெளியிடுவார். படம்:எஸ்டி, டெஸ்மண்ட் பூ -

சிஎஸ்ஜி எனப்படும் கொவிட்-19 மானியத்திற்கு விண்ணப்பித்த கிட்டத்தட்ட 133,00 பேரில் பெரும்பாலானோருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்திருக்கிறார்.

27ஆம் தேதி நிலவரப்படி, சிஎஸ்ஜிக்காக விண்ணப்பித்தோரில் 83,000 பேருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுமார் 46,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் திரு மசகோஸ், நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி இங் லிங் லிங்கின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது கூறினார். "இவர்களில் சுமார் 2,500 பேரின் வருமானம் முன்பு இருந்த மொத்த மாதாந்திர வருமானம் 10,000 வெள்ளியைவிட அதிகமாக இருந்ததாலும் அல்லது தனிநபர் வருமானம் 3,1000க்கு அதிகமாக இருந்ததாலும் அல்லது வேறு சில வரம்பு நிலைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதாலும் அந்த விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை," என்று திரு மசகோஸ் விளக்கினார்.