கெப்பல் ஃபெல்ஸ் நிறுவனம் தொடர்பில் எழுவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள்

கப்­பல் கட்­டும் நிறு­வ­ன­மான கெப்­பல் ஃபெல்ஸ் தொடர்­பில் எழு­வர் மீது நேற்று பல்­வேறு ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

அந்த நிறு­வ­னத்­தில் மேற்­பார்­வை­யா­ள­ராக வேலை பார்த்த 40 வயது எல்­வின் லிம் வீ லுன் மீது 46 குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டு உள்­ளன. இதர நிறு­வ­னங்­க­ளுக்கு ஒப்­பந்­தக் குத்­த­கை­களை வழங்கி அதற்கு கைமா­றாக லஞ்­சம் பெற்ற குற்­றச்­சாட்­டு­களை அவர் எதிர்­நோக்­கு­கி­றார்.

இதற்­காக ரோட்­டரி ஆஃப்ஷோர் சொல்­யூ­ஷன்ஸ் நிறு­வ­னத்­தின் திட்ட இயக்­கு­ந­ரான 45 வயது ராஜ­விக்­ர­மன் ஜெய­பாண்­டி­யன், மெகா­மரின் சர்­வீ­சஸ் நிறு­வ­னத்­தின் இயக்­கு­ந­ரான 54 வயது கோ ங்காக் எங் ஆகி­யோ­ரு­டன் சேர்ந்து அவர் சதித் திட்­டம் தீட்­டி­ய­தா­கக் கூறப்­படு­கிறது.

மூன்று நிறு­வ­னங்­களை உள்­ள­டக்­கிய விவ­கா­ரத்­தில் லஞ்­சத்­துக்கு வர்த்­தக ஒப்­பந்­தங்­கள் வழங்­கும் குற்­றச்­செ­யல்­கள் 2014க்கும் 2017க்கும் இடை­யில் நடை­பெற்­ற­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­விக்­கின்­றன.

மூவ­ரும் சேர்ந்து மூன்று நிறு­வனங்­க­ளி­ட­மி­ருந்து மொத்­தம் 879,000 வெள்­ளியை லஞ்­ச­மா­கப் பெற்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இந்­தத் தொகையை மூவ­ரும் பகிர்ந்து­கொள்ள திட்­ட­மிட்­டி­ருந்­த­னர்.

திரு கோ, மூன்று நிறு­வ­னங்­களி­ட­மி­ருந்து லஞ்­சம் பெறு­வ­தற்கு தர­க­ரா­கச் செயல்­பட்­டுள்­ள­தா­க­வும் ஆவ­ணங்­கள் தெரி­விக்­கின்­றன.

ராஜ­விக்­ர­ம­னும் கோவும் கூடு­தலாக தலா மூன்று குற்­றச்­சாட்டு­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர். இதே போன்று ேவறு விவ­கா­ரத்­தில் லஞ்­சத்­துக்கு வர்த்­தக ஒப்­பந்­தங்­களை வழங்­கும் நோக்­கத்­தில் இரு­வ­ரும் செயல்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கு உத­வி­யாக இருந்­த­தற்­காக ராஜ­விக்­ர­மன் கோவி­ட­மி­ருந்து சுமார் 7,000 வெள்­ளியை வெகு­ம­தி­யா­கப் பெற்­றுள்­ளார்.

வரும் நவம்­பர் 11ஆம் தேதி லிம், கோ, ராஜ­விக்­ர­மன் ஆகிய மூவ­ரும் நீதி­மன்­றத்­தில் முன்­னிலை­யா­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் கெப்­பல் ஃபெல்ஸ் பேச்­சா­ளர் ஒரு­வர், 2019ஆம் ஆண்­டி­லேயே லிம் பணி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டு­விட்­ட­தாக தெரி­வித்­துள்­ளார். இந்த வழக்கு விசா­ர­ணை­யில் அதி­கா­ரி­க­ளுக்கு முழு ஒத்­து­ழைப்பு வழங்கி வரு­வ­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் வழக்கு நிலு­வை­யில் உள்­ள­தால் எந்­த­வித கருத்­தும் இதன் தொடர்­பில் தெரி­விக்க முடி­யாது என்­றும் அந்­தப் ேபச்­சா­ளர் சொன்­னார்.

மற்­றொரு நில­வ­ரத்­தில் திரு கோவின் நண்­ப­ரான 48 வயது ஓங் டுன் சாய் மீது பத்து ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டு உள்­ளன.

ஒரு நிறு­வ­னத்­தின் பெய­ரில் போலி­யான ஆவ­ணங்­க­ளைத் தயா­ரிக்க உத­வி­ய­தற்­காக அவர் கோவி­ட­மி­ருந்து மொத்­தம் 15,100 வெள்ளி மதிப்­புள்ள வெகு­ம­தி­கள் பெற்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இவர், நவம்­பர் 4ஆம் தேதி நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­க­வி­ருக்­கி­றார். லஞ்­சத்­துக்கு வர்த்­தக ஒப்­பந்­தங்­க­ளைப் பெற்­ற­வர்­களும் ஊழல் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு ஆளாகி­யி­ருக்­கின்­ற­னர்.

டைட்­டான் ஆஃப்ேஷார் எக்­யூப்­மெண்ட் நிறு­வ­னத்­தின் யூ கே சூன், 50, ஸ்பெக்ட்­ரமா மரைன் அண்ட் இண்­டஸ்­டி­ரி­யல் சப்­ளை­சின் இயக்­கு­ந­ரான கோ ஷெங் லி ஸ்டான்லி, 33, குரோவா நிறு­வனத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் ஃபத்­குல்லா டியாப், 59 ஆகிய மூவர் மீது ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

மூவ­ருக்கு S$196,700 மதிப்­புள்ள லஞ்­சத்தை வழங்­கி­ய­தன் தொடர்­பில் யூ ஏழு குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­கி­றார்.

கோ ஷெங் லி ஸ்டான்லி, ஏறக்­கு­றைய 190,900 வெள்ளி லஞ்­சம் வழங்­கி­ய­தாக 21 குற்­றச்­சாட்­டு­களை­யும் ஃபத்­குல்லா, 492,300 வெள்ளி மதிப்­புள்ள வெகு­ம­தி­களை வழங்­கி­ய­தாக 18 குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் எதிர்­நோக்­கு­கின்­ற­னர்.

யூவும் ஃபத்­குல்­லா­வும் நவம்­பர் 11ஆம் தேதி நீதி­மன்­றத்­தில் நிறுத்­தப்­ப­டு­கின்­ற­னர். கோ ஷெங் லி ஸ்டான்லி நவம்­பர் 13ஆம் தேதி நீதி­மன்­றத்­தில் வழக்­கைச் சந்­திக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!