மின்-ஸ்கூட்டர் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு $164,000 நிதி திரட்டிய 13 வயதுச் சிறுமி

மின்-ஸ்கூட்­டர் விபத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் செய்­தி­யைப் படித்த 13 வய­துச் சிறுமி ஒரு­வர், மனம் உருகி, அவ­ருக்கு எப்­பா­டு­பட்­டா­வது உதவ வேண்­டும் என்ற இலக்கை முன்­னி­றுத்தி அதற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டார். அதற்கு கைமேல் பலன் கிடைத்­தது.

மின்­னஞ்­சல் மூலம் பல­ருக்­குக் கடி­தம் எழு­தி­ய­தன் மூலம் $164,000 நிதி திரட்­டி­யுள்­ளார்.

செயின்ட் ஜோசப் அனைத்­து­ல­கப் பள்­ளி­யில் 7ஆம் வகுப்­புப் பயி­லும் சோபியா சியாம், விபத்­தில் மூளை பாதிப்­பால் அவ­தி­யு­றும் 57 வயது திரு­மதி ஆங் லியூ கியோ­வுக்கு உதவ தனது தாயின் துணை­யு­டன் கடந்த ஆகஸ்ட் மாதம் பெரிய அள­வில் நிதி­தி­ரட்­டும் இயக்­கத்­தைத் தொடங்­கி­னார்.

சிறு­மி­யின் முயற்­சி­யால் கடந்த இரண்டு மாதங்­களில் 1,459 பேர் திரு­மதி ஆங் லியூ கியோ­வுக்கு நிதி­யு­தவி அளித்­துள்­ள­னர்.

இவ்­வ­ளவு பேர் நிதி­ய­ளித்­தது தனக்கு ஆச்­ச­ரி­யம் அளிப்­ப­தா­கக் கூறி­யுள்­ளார் சிறுமி சோபியா.

முகம் தெரி­யாத எத்­த­னையோ பேர் நிதி அளிக்க முன் வந்­த­தோடு தமது முயற்­சிக்கு ஊக்­க­மும் அளித்­த­தா­கக் கூறு­கி­றார் சோபியா.

2016ஆம் ஆண்டு செப்­டம்­ப­ரில் பாசிர் ரிஸ் டிரைவ் 1, பேருந்து நிறுத்­தத்­தில் இந்த மின்-ஸ்­கூட்­டர் விபத்து ஏற்­பட்­டது.

இதில் படு­கா­ய­ம­டைந்தார் திரு லியோங்­கின் மனைவி 57 வயது ஆங் லியூ கியோவ்.

அந்த விபத்­துக்­குப் பின் அவரால் பேசவோ, படிக்­கவோ, எழு­தவோ முடி­ய­வில்லை.

உண­வ­ருந்­து­வது, உடை அணி­வது, கழி­வ­றை­யைப் பயன்­ப­டுத்­து­வது போன்ற அன்­றாட நட­வ­டிக்­கை­களில்கூட அவ­ருக்கு யாரா­வது உதவி செய்ய வேண்­டிய நிலைக்கு ஆளானார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!