பணிப்பெண்ணை வேறு வேலையில் அமர்த்தும் முதலாளிகள்: எச்சரிக்கைக்கு பதில் அபராதம் கட்டவேண்டிய நிலை வரலாம்

வீட்டு வேலை பணிப்­பெண்ணை சட்­ட­வி­ரோ­த­மாக வேறு இடத்­தில் வேலை செய்­யு­மாறு கட்­டா­யப்­படுத்தி­ய­தற்­காக எச்­ச­ரிக்­கப்­பட்டு இருக்­கும் முத­லா­ளி­க­ளுக்கு அபராதம் விதிக்­கப்­ப­டக்­கூ­டும்.

மனி­த­வள அமைச்சு இதன் தொடர்­பில் தன்­னு­டைய வழி­காட்டி நெறி­மு­றை­களை மறு­ப­ரி­சீ­லனை செய்து வரு­கிறது. மனி­த­வள துணை அமைச்­சர் கான் சியோ ஹுவாங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் இதனை தெரி­வித்­தார். பணிப்­பெண் தொடர்­பான தங்­க­ளு­டைய பொறுப்­பு­களை மிக முக்­கி­ய­மா­ன­வை­யாக முத­லா­ளி­கள் கரு­த­வேண்­டும் என்று நீ சூன் குழுத்­தொ­குதி உறுப்­பி­ன­ரான லூயிஸ் இங்­கிற்கு அளித்த பதி­லில் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இருந்­தா­லும் வீட்டு வேலை பணிப்­பெண்­க­ளைச் சட்­ட­வி­ரோ­த­மாக வேறு வேலை­களில் ஈடுபடுத்து­ வ­தற்குரிய கூடி­ன­பட்ச தண்டனையை மறு­ப­ரிசீ­லனை செய்­வ­தற்­கான திட்­டம் எது­வும் இல்லை என்று மனிதவள அமைச்சு குறிப்­பிட்­டது.

இத்­த­கைய சட்­ட­வி­ரோத விவ­கா­ரங்­கள் கடந்த சில ஆண்­டு­களா­கவே நிலை­யாக இருந்து வரு­கின்­றன. பணிப்­பெண்­களைத் தவ­றாக வேறு வேலை­களில் ஈடு­ப­டுத்­தும் முத­லா­ளி­க­ளுக்­கான தண்­டனை முறை பற்­றிய மறு­ப­ரி­சீ­லனை குறித்து அக்­டோ­பர் 5ஆம் தேதி நாடா­ளு­மன்­றத்­தில் திரு­வாட்டி கான் தெரி­வித்து இருந்­தார்.

சட்­ட­வி­ரோ­த­மாக பணிப்­பெண்ணை வேறு வேலை­யில் அமர்த்­தும் முத­லா­ளிக்கு இப்­போது $10,000 வரை அப­ரா­தம் விதிக்க முடி­யும். கடந்த 2017 முதல் 2019 வரை ஒவ்­வோர் ஆண்­டும் 16 முத­லா­ளி­க­ளுக்கு $3,300 முதல் $24,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­பட்டு இருப்­ப­தாக அமைச்­சர் மன்றத்தில் குறிப்­பிட்­டார்.

முத­லா­ளி­கள், வெளி­நாட்டுப் பணிப்­பெண்­கள் நல­னில் அக்­கறை காட்­டும் அமைப்­பு­கள் ஆகி­யவை உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பு­க­ளை­யும் கலந்து ஆலோ­சித்து அமைச்சு தனது வழி­காட்டி நெறி­மு­றை­களை மறு­ப­ரி­சீ­லனை செய்து வரு­வ­தா­க­வும் திரு­வாட்டி கான் தெரி­வித்­தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!