அரசாங்க ஊழியர்களுக்குப் புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பத்துடன் இணைய வசதி

அர­சாங்க ஊழி­யர்­கள் தங்­க­ளது வேலைக்­கான கைய­டக்­கக் கணி­னி­களில் எவ்­வித சிறப்­புக் கரு­வி­க­ளை­யும் பொருத்­தா­மல் பாது­காப்­பான இணைய வச­தி­க­ளைப் பெறு­வர்.

தொலை­வில் இருந்து இயக்­கக்­கூ­டிய இணைய உலாவி (பிரௌ­சர்) அதி­ந­வீன தொழில்­நுட்­பம் மூலம் இது சாத்­தி­ய­மா­கிறது.

அர­சாங்­கப் பணி­களில் ஈடு­பட்­டுள்ள 146,000 பணி­யா­ளர்­களில் பெரும்­பான்­மை­யி­னர் வரும் நவம்­பர் 2ஆம் தேதி முதல், எஸ்­ஐ­எஸ் எனப்­படும் இந்­தப் புதிய தொழில்­நுட்­பத்­தில் இணை­யத்­தைப் பாது­காப்­பா­கப் பயன்­ப­டுத்­து­வர்.

இதன்­மூ­லம் பாது­காப்­பான முறை­யில் சமூக ஊட­கங்­க­ளுக்­குச் செல்­வது, மின்­ம­டல் அனுப்­பு­வது, கோப்­பு­களை இணைப்­பது போன்­ற­வற்றை அவர்­க­ளால் செய்­ய­மு­டி­யும். இதனை அர­சாங்­கத்­தின் அறி­வார்ந்த நாடு மற்­றும் மின்­னி­லக்­கக் குழு (எஸ்­என்­டி­ஜிஜி) நேற்று அறி­வித்­தது.

தற்­போது அர­சாங்க அலு­வ­ல­கங்­களில் ‘ஐஎஸ்­எஸ்’ என்­னும் தொழில்­நுட்­பத்­தி­லான இணை­யக் கட்­ட­மைப்பு நடப்­பில் உள்­ளது.

இந்­தத் தொழில்­நுட்­பம், பய­னா­ளர்­கள் இணைய உலா­வி­யைப் பயன்­ப­டுத்­தும்­போது அவர்­க­ளது பணி­யி­டக் கணி­னிக் கட்­ட­மைப்­

பு­டனான தொடர்­பைத் துண்­டித்­து­வி­டும். அர­சாங்­கத்­தின் இணை­யத்தை ஊடு­ரு­வல்­களில் இருந்தும் அர­சாங்­கத் தர­வு­க­ளைப் பாது­காப்­ப­தற்கும் இந்த முறை கையா­ளப்­பட்­டது.

அவ்­வாறு கட்­டுப்­பாட்­டுக்­குள் இணை­யத்­தைப் பயன்­ப­டுத்தி வந்த அர­சாங்க ஊழி­யர்­களில் 108,000 பேர் புதிய தொழில்­நுட்­பத்­தி­லான ‘எஸ்­ஐ­எஸ்’ இணையப் பயன்­பாட்டு முறைக்கு மாற­வி­ருக்­கின்­ற­னர்.

முக்­கி­ய­மான தர­வு­க­ளைக் கையாள்­ப­வர்­கள் மட்­டும் வழக்­கத்­தில் உள்ள ‘ஐஎஸ்­எஸ்’ முறை­யைப் பின்­பற்­று­வ­தைத் தொடர்­வர்.

இந்­தப் புதிய தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தன் மூலம் அர­சாங்­கச் சேவைத்­து­றை­யின் உற்­பத்தி அதி­க­ரிக்­கும் என்று

அந்­தக் குழு தெரி­வித்­தது.

பல­த­ரப்­பட்ட தொழில்­நுட்­பத்தை ஒருங்­கி­ணைத்து அதை மேம்­ப­டுத்தி பல அடுக்­கு­க­ளைக் கொண்ட பாது­காப்­புக் கட்­ட­மைப்பை உள்­ள­டக்­கிய தொலை­தூர இணை­ய­

உ­லாவி தொழில்­நுட்­பம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

அர­சாங்­கத்­தின் முக்­கி­ய­மான தர­வு­க­ளைப் பாது­காக்க மேம்­பட்ட பாது­காப்பு முறை­களை நாம் கொண்­டி­ருப்­பது மிக அவ­சி­யம் என்று எஸ்­என்­டி­ஜிஜி குழு தெரி­வித்­தது.

புதிய தொலை­தூர இணைய உலாவி தொழில்­நுட்­பத்­தின் வாயி­லாக இணை­யத்­தைப் பயன்­ப­டுத்­தும்­போது அது இணை­யம் சார்ந்த தர­வு­களை மட்­டும் தனியே கையாள்­வ­தற்கு ஒரு தர­வுக்­கொள்­

க­லனை உரு­வாக்­கிக்­கொள்­ளும்.

இதன்­மூ­லம் இணை­யத்­தொ­டர்­புக்­கும் அர­சாங்­கத்­தின் கணி­னிக் கட்­ட­மைப்­பு­க­ளுக்கும் எவ்­வித நேரடி இணைப்­பும் இல்­லா­மல் இருக்­கும். எனவே, கணி­னிக் கட்­ட­மைப்பை செய­லி­ழக்க வைக்­கும் வகை­யி­லும் தர­வு­க­ளைத் திரு­டும் வகை­யி­லும் ஆன கணி­னிக் கிரு­மி­கள் மற்­றும் ஊடு­ரு­வல்­கள் போன்­றவை நிகழ்­வ­தற்கு வாய்ப்­பில்லை.

இந்த புதிய தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தன் மூலம் அர­சாங்க ஊழி­யர்­கள் இனி அனு­ம­திக்­கப்­பட்ட இணை­யத் தளங்­க­ளுக்கு தங்­கள் கோப்­பு­களைப் பதி­வேற்­றம் செய்­ய­வும் முடி­யும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!