தர்மன்: ஊழியர்களை முன்கூட்டியே தயார்ப்படுத்துங்கள்

கடைசி நிமி­டத்­தில் ஊழி­யர்­க­ளுக்கு மறு­ப­யிற்­சி­ய­ளிக்­கும் முயற்­சி­யில் இறங்­கு­வ­தை­விட, எதிர்­கால வேலை­க­ளுக்­காக அவர்­களை முன்­கூட்­டியே தயார்ப்­ப­டுத்த வேண்­டும் என்று மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம் முத­லா­ளி­க­ளைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

“வேலைச் சந்­தை­யில் ஏற்­படும் மாற்­றங்­க­ளுக்­கேற்ப சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­களை ஆயத்­தப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும். இல்­லை­யேல், போட்­டித்­தன்­மை­யின் அதி­க­ரிப்­பைத் தாக்­குப்­பி­டிக்க முடி­யா­மல் அவர்­கள் ஊழி­ய­ர­ணி­யை­விட்டு விலக வேண்­டி­யி­ருக்­கும்,” என்­றும் மூத்த அமைச்­சர் எச்­ச­ரித்­தார்.

ஓசி­பிசி வங்­கிக் குழு­மத்­தின் தலைமை நிர்­வாகி திரு சேமு­வல் சியெ­னு­டன் வேலை இணைப்பு மற்­றும் ஊழி­யர்­க­ளுக்கு மறு­ப­யிற்சி அளித்­தல் பற்­றிய கலந்­து­ரை­யா­ட­லில் திரு தர்­மன் பங்­கேற்றார்.

“முத­லா­ளி­கள் தங்­க­ளி­டம் ஒரு திறன்­மிக்க ஊழி­ய­ரணி இருப்­பதை உறுதி செய்ய, கடைசி நேரம் வரை காத்­தி­ருக்­கக்­கூ­டாது. ஊழியர்கள் வேலை­யில் இருக்­கும்­போதே அவர்­களை எதிர்­கால வேலை­க­ளுக்­குத் தயார்ப்­ப­டுத்த வேண்­டும்.

“வேலை­களை இழந்­துள்ள ஊழி­யர்­க­ளுக்கு அவர்­க­ளின் திறன்­க­ளுக்­கேற்ப பயிற்­சி­யைத் தேர்வு செய்து அவர்­களை அதில் ஈடு­ப­டுத்த வேண்­டும். இவ்­வாறு சவால்­க­ளைச் சமா­ளிக்க முத­லா­ளி­களும் காலத்­துக்­கேற்ப தங்­களை மாற்­றிக்­கொள்ள ஊழி­யர்­களும் முன்­வந்­தால் இரு தரப்­பி­ன­ருக்­கும் நன்மை கிட்­டும்,” என்று மூத்த அமைச்­சர் விவ­ரித்­தார்.

ஓசி­பிசி வங்கி தனது ஊழி­யர்­க­ளின் திறன் மேம்­பாட்­டுக்கு என்­னென்ன திட்­டங்­களை வைத்­துள்­ளன என்று தெரிந்­து­கொள்ள அங்கு நேற்று வருகை புரிந்­தார் திரு தர்­மன்.

பின்­னர் வங்­கி­யி­யல், நிதிக் கழ­கத்­தின் ஏற்­பாட்­டில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் திரு தர்­மன், ஓசி­பிசி வங்­கிக் குழு­மத்­தின் தலைமை நிர்­வா­கி­யும் தேசிய வேலைகள் மன்­றத்­தின் உறுப்­பி­ன­ரு­மான திரு சேமு­வல் சியெ­னு­டன் பங்­கேற்­றார்.

வங்­கி­யி­யல், நிதிக் கழ­கம், சிங்­கப்­பூர் வர்த்­த­கச் சம்­மே­ள­னம், என்­டி­யு­சி­யின் வேலை­வாய்ப்பு, வேலை­நி­ய­ம­னக் கழ­கம் ஆகி­யவை தனது வேலை மேம்­பாட்­டுப் பங்­கா­ளி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன என்று தேசிய வேலை­கள் மன்­றம் நேற்று அறி­வித்­தது.

இந்த மூன்று அமைப்­பு­களும் சேர்ந்து நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்றி, புதிய வேலை மற்­றும் வேலை­ப்ப­யிற்சி வாய்ப்­பு­களை உரு­வாக்­க­வும் சிங்­கப்­பூ­ரர்­கள் இந்த வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தை­யும் உறுதி செய்­யும்.

வங்­கி­யி­யல், நிதிக் கழ­கம், அடுத்த ஆறு மாதங்­களில் நிதித் துறை­யில் வேலை அமர்த்­தும் வாய்ப்­பு­கள், வேலை­யி­ழப்­பு­கள் ஆகி­யவை பற்றி நன்கு ஆரா­யும்.

இந்­தத் தக­வ­லைக் கொண்டு அது இதர நிதி அமைப்­பு­க­ளு­டன் சேர்ந்து ஊழி­யர்­க­ளுக்கு மறு­ப­யிற்சி அளித்­தல், புதிய பயிற்­சி­களை வடி­வ­மைத்­தல் ஆகி­ய­வற்­றில் கவ­னம் செலுத்­தும்.

கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்ற திரு சியென், “நிதித் துறை கண்டு வரும் மாற்­றங்­களை ஓசி­பிசி ஆராய்ந்து, எதிர்­கால சவால்­க­ளுக்கு தொழில்­நுட்­பம், தரவு, மின்­னி­லக்­க­ம­யம் ஆகிய பிரி­வு­களில் முன்­னேற்­றம் தேவைப்­ப­டு­கிறது என்று கண்­ட­றிந்­தது.

“அதற்­காக ஓசி­பிசி இந்­தப் பிரி­வு­களில் ஊழி­யர்­க­ளின் மறு­ப­யிற்­சிக்கு $20 மில்­லி­யனை ஒதுக்­கி­யுள்­ளது. மேலும் நிதி தொடர்­பான நிறு­வ­னங்­கள் ஊழி­யர்­க­ளைப் பணி­ய­மர்த்­தும்­போது அவர்­க­ளி­டம் உள்ள திறன்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்க வலி­யு­றுத்­தப்­படும்,” என்­றும் விளக்­கி­னார்.

பங்­கா­ளித்­து­வத்­தின் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்­திய திரு தர்­ம­னும் திரு சியெ­னும், நிதிச் சேவை­நடத்­து­பவர்­கள் ஊழி­யர்­களின் பயிற்­று­விப்­பா­ளர்­க­ளா­க­வும் கூடு­தல் பங்­காற்­ற­லாம் என்­றும் அப்­போது ஊழி­யர்­கள் தங்­க­ளுக்கு அறி­மு­க­மா­ன­வர்­களிடம் பயிற்­சி­ பெறுவதை விரும்­பு­வார்­கள் என்­றும் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!