சொந்த டிரம்ஸ் பள்ளியை நடத்தி வரும் இளைஞர்

இசைத் தயா­ரிப்பு, இசைப் பள்ளி, இசைக் குழு, இசைக் கலை­ஞர், என்று இசை­யைப் பல அவ­தா­ரங்­களில் ரசித்து அனு­ப­வித்­தி­ருக்­கி­றார் இந்த துடிப்­பு­மிக்க டிரம்ஸ் கலை­ஞர். கலை­களில் முழு­நே­ர­மாக ஈடு­ப­டு­வ­தற்­குத் தயக்­கம் காட்­டும் நம் இளம் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கி­டையே இசை வழி தனக்­கென ஒரு தனி அடை­யா­ளத்­தையே உரு­வாக்­கி­யுள்­ளார் ஜோவாஷ் எடேல்ஸ்­டின், 25.

இந்த இளம் வய­தி­லேயே ‘ஹேய் டிரம்ஸ் ஸ்டூ­டியோ’ (Hei Drums Studio) என்ற டிரம்ஸ் இசைப் பள்­ளியை நடத்தி வரு­கி­றார் இவர்.

டிரம்ஸ் இசைப் பய­ணத்­தில் ஆர்­வம் பிறந்­தது பற்றி...

இவ­ரின் இசைப் பய­ணம் 7 வய­தில் துவங்­கி­விட்­டது. ஒவ்­வொரு வார­மும் அவ­ரின் குடும்­பத்­தார் செல்­லும் தேவா­ல­யத்­தில் தன்­னு­டைய அண்­ணன் டிரம்ஸ் வாசிப்­ப­தைப் பார்த்து வளர்ந்த ஜோவா­ஷிற்கு, தன்­னி­டம் உள்ள திறன் மூலம் மற்­ற­வர்­க­ளின் தெய்வ வழி­பாட்­டிற்கு அர்த்­தம் சேர்க்­க­வேண்­டும் என்று எண்­ணி­னார். தேவா­ல­யத்­தில் வாசிக்­கத் தொடங்கி இன்று சிங்­கப்­பூ­ரின் பிர­பல மேடை­க­ளி­லும் அரங்­கங்­க­ளி­லும் தனது இசை வழி பல­ரின் மன­தில் இடம்­பி­டித்­துள்­ளார்.

இசைப் பள்­ளி­யின் தரத்தை நிலை­நாட்­டு­வ­தைப் பற்றி...

“எதைச் செய்­தா­லும் நீங்­கள் செய்­யும் தொழி­லில் திறன் வாய்ந்­த­வ­ராக விளங்­க­வேண்­டும். நாம் விற்­கும் பொருளோ வழங்­கும் சேவையோ சிறந்த தரத்­தில் இருந்­தால்­தான் அதைப் பெறு­வ­தற்கு மக்­கள் நாடி வரு­வர். அதே­போல்­தான் நான் இந்த பள்­ளி­யைச் சிறந்த தரத்­து­டன் நடத்­த­வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக இருக்­கி­றேன். ஒவ்­வொரு நாளும் நானும் டிரம்ஸ் பயிற்சி செய்­வ­தோடு மாண­வர்­க­ளுக்கு கற்­பிக்­கும் உத்­தி­க­ளைப் பற்றி ஆராய்ச்­சி­யும் செய்­வேன். எனது ஸ்டூ­டியோ, மாண­வர்­க­ளுக்­கான கரு­வி­கள், கற்­கும் சூழல் என அனைத்­துமே அவர்­க­ளது கற்­றல் அனு­ப­வத்தை மேம்­ப­டுத்த உதவ வேண்­டும்,” என்று கூறு­கி­றார் ஜோவாஷ். தற்­போது இவ­ரின் பள்­ளி­யில் ஐந்து வயது சிறு­வர் முதல் மூன்று பிள்­ளை­க­ளுக்­குத் தாயா­ன­வர் வரை டிரம்ஸ் கற்­றுக்­கொள்­கின்­ற­னர்.

தன் இசை மீது கொண்ட நம்­பிக்கை, ஈடு­பாடு பற்றி...

பொது­வாக ஒரு தொழி­லைத் தொடங்க விரும்­பு­ப­வர், அதற்­கான சிந்­த­னை­யை­யும் ஆர்­வத்­தை­யும் நடுத்­தர வய­தில்­தான் பெறு­வர். ஆனால் ஜோவா­ஷிற்கு இசைப் பள்ளி நடத்த வேண்­டும் என்ற வேட்கை சிறு­வ­ய­தி­லி­ருந்தே இருந்­தது.

இசை­யைப் பொழு­து­போக்­காக கரு­தா­மல், தனது இன்­பத்­தைப் பிற­ரும் பெற வழி செய்­தி­ருக்­கி­றார் இவர். விருந்­தோம்­பல் துறை­யில் தனது பட்­டப்­ப­டிப்பை முடித்­துள்ள ஜோவா­ஷிற்கு தனது குறிக்­கோள் தெளி­வாக தெரிந்­தது. வேறு துறை சார்ந்­த­தாக தனது படிப்பு இருந்­தா­லும் இசை­தான் இறு­தி­வ­ரை­த­னக்­குக் கைகொ­டுக்­கும் என்று நம்­பி­னார்.

“எனக்­குப் பிடித்­த­மான இசையை என் தொழி­லாக மேற்­கொண்டு வரு­வது ஒவ்­வொரு நாளும் உற்­சா­கத்தை அளித்து வரு­கிறது. வரு­மா­னம் பற்றி அதி­கம் கவ­லைப்­பட்­ட­தில்லை. மன­நி­றை­வைத் தரும் ஒன்­றைச் செய்­வது கட­வுள் தந்த வரம். செய்­யும் தொழி­லில் சிறந்து விளங்கி முன்­னே­றி­னால் வெற்றி தானா­கவே வந்து சேரும்,” என்­றார்.

சவால்­க­ளைப் பற்றி...

எப்­போ­தும் சிரித்த முகத்­து­டன் காணப்­பட்­டா­லும் நிதி பற்­றாக்­குறை, போதிய வாய்ப்­பு­கள் கிட்­டா­தது என இவ­ரின் இசைப் பய­ணத்­தில் சவால்­கள் பல. ஆனால் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தையே ஒவ்­வொரு முறை­யும் பழக்­க­மாக்­கிக்­கொண்­டார் இவர். தனது ஸ்டூ­டியோ இருக்­கும் வட்­டா­ரத்­தில் உள்ள வீடு­க­ளுக்­குத் தானா­கவே சென்று பள்­ளியை விளம்­ப­ரப்­ப­டுத்­து­வது, தனது வரு­மா­னத்தை ஸ்டூ­டியோ மேம்­பாட்­டிற்­கா­கச் செல­வி­டு­வது போன்ற பல முயற்­சி­களை எடுத்து வரு­கி­றார் ஜோவாஷ். அதிக வரு­மா­னம் ஈட்­டி­னால்­தான் அது வெற்­றி­க­ர­மான தொழில் என்­ப­தற்கு விதி­வி­லக்­காக இருக்­கும் இவர், இன்­றைய இளை­யர்­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மாக உரு­வெ­டுத்­துள்­ளார்.

“கலையை முழு­நே­ரத் தொழி­லாக மேற்­கொள்ள விரும்­பும் இளை­ஞர்­கள், அஞ்­சா­மல் தைரி­ய­மாக அதில் முதல் படியை எடுத்து வையுங்­கள்,” என்­கி­றார் ஜோவாஷ்.

செய்தி: இந்து இளங்­கோ­வன்

படம்: ஜோவாஷ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!