இனவாதக் கருத்து: சிறுவர்க்கான சீனப் புத்தகம் பெரியவர்கள் பகுதிக்கு மாற்றம்

தேசிய நூல­க வாரி­யம் சிறு­வர்­களுக்­கான புத்­த­கம் ஒன்றை பெரி­ய­வர்­க­ளுக்­கான புத்­த­கங்­கள் இருக்­கும் பகு­திக்கு மாற்­றி­யுள்­ளது. மாற்­றப்­பட்ட அந்­தப் புத்­த­கத்­தில் இன­வெறி குறித்து கருத்­து­கள் இருந்­த­தாக வந்த புகாரை அடுத்து வாரி­யம் இந்த நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளது. வாரி­யம் நேற்று வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில் இத­னைத் தெரி­வித்­தது.

‘ஹு வின்ஸ்’ என்ற தலைப்­பிலான சீனமொழிப் புத்­த­கம் குறித்து வாரி­யத்­தின் கலந்­தாய்­வுக்­குழு மேற்­கொண்ட புத்­தக ஆய்­வுக்­குப் பின் இந்த முடிவு எடுக்­கப்­பட்­ட­தாக வாரி­யம் அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

பள்­ளி­யில் இன­ரீ­தி­யி­லான கேலி, கிண்­டல் போன்­ற­வற்­றில் ஈடு­படும் சிறு­வர்­க­ளைத் திருத்தி அவர்­கள் தவ­றான புரிந்­து­ணர்­வைக் கொண்­டி­ருந்­தால் அவர்­களை நல்­வழிப்­ப­டுத்­து­த­லுக்கு பெற்­றோ­ரும் பிள்­ளை­க­ளின் காப்­பா­ளர்­களும் இந்­தப் புத்­த­கத்­தைப் படித்து விவா­திக்­க­லாம் என்று வாரி­யம் கூறி­யது. வு ஸிங் ஹுவா என்­ப­வ­ரால் எழு­தப்­பட்ட ‘ஹு வின்ஸ்’ என்­னும் புத்­த­கம், பொது­மக்­க­ளின் புகாரை அடுத்து நூல­கத்­தில் இருந்து ஜூலை 19ஆம் தேதி அகற்­றப்­பட்டு, கலந்­தாய்­வுக்­கு­ழு­வின் மதிப்­பீட்டுக்குப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டது.

படங்­க­ளைக் கொண்டு கதை­சொல்­லும் அந்­தப் புத்­த­கம், ஏழு வயது முதல் ஒன்­பது வயது வரை­யி­லான சிறு­வர்­களை இலக்­கா­கக் கொண்டு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இதில் கறுத்த நிற­மு­டைய சிறு­வன் ஒரு­வன் எண்­ணெய் வடிந்­த­நி­லை­யில் சுருள் முடி­யைக் கொண்­டுள்­ளான். அவன் பெயர் ‘மோ மோ’. சீன மொழி­யில் ‘மோ மோ’ என்­பது அதி­க­மான முடி என்று பொருள்.

இந்­தப் புத்­த­கம் ‘மார்­‌ஷல் கேவெ­டி‌ஷ் எடு­கே­‌ஷன்’ என்ற நிறு­வ­னத்­தால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. ‘அமே­ஸிங் அட்­வன்ட்­சர்ஸ் ஆஃப் பி பி’ என்ற தலைப்­பி­லான புத்­த­கத் தொகுப்­பின் ஒரு பகு­தியே ‘ஹு வின்ஸ்’ புத்­த­கம். நூல­கத்­தில் இந்­தப் புத்­த­கத்­தைப் படித்த எஸ்­டெல்லா யங், 42 என்­ப­வர், தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் கடந்த ஜூலை மாதம் இது­கு­றித்து உம் யூசோஃப் என்ற பெய­ரில் கருத்துத் தெரிவித்துளளார். அதில், “அதிர்ச்சி­யூட்­டும் இன­வாதி’ என்­றும் மோச­மான இன­வா­தக் கருத்­து­கள் வெளிப்­ப­டை­யாக எழு­தப்­பட்­டுள்­ளன. இந்­தப் படப்­புத்­த­கத்­தில் எவ்­வி­தத் தொடர்­பும் இல்­லா­மல் இந்த கறுப்­புத் தோலை­யு­டைய சிறு­வ­னின் பாத்­தி­ரம் உள்­ளது எனச் சாடி­யி­ருந்­தார். இது­கு­றித்து புத்­தக வெளி­யீட்டு நிறு­வ­னம் பின்­னர் தனது வாச­கர்­க­ளுக்கு வருத்­தம் தெரி­வித்து ஜூலை 21ஆம் தேதி அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதிவு ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தது. அத்­து­டன் அந்­தப் புத்­த­கத்­தின் விற்­ப­னையை நிறுத்­தியதோடு, கடை­களில் உள்ள புத்­த­கங்­க­ளை­யும் மீட்­டுக்­கொள்­ளப் போவ­தாக அறி­வித்­தி­ருந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!