சிறப்புப் பயண ஏற்பாடுகளைத் தொடங்க சிங்கப்பூரும் ஜெர்மனியும் இணக்கம்

சிறப்புப் பயண ஏற்பாடுகளைத் தொடங்க சிங்கப்பூரும் ஜெர்மனியும் இணக்கம்

2 mins read
16fbce98-3e2e-4bcd-a330-5ca0a1500a76
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஏஎஃப்பி -

சிங்­கப்­பூ­ரும் ஜெர்­ம­னி­யும் இரு நாடு­க­ளுக்கு இடையே சிறப்­புப் பயண ஏற்­பா­டு­க­ளைத் தொடங்க இணக்­கம் கண்­டுள்­ளன.

சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சும் ஜெர்­மா­னிய கூட்­ட­ரசு வெளி­யு­றவு அலு­வ­ல­க­மும் நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில் இது தெரி­விக்­கப்­பட்­டது.

இரு நாடு­க­ளுக்கு இடையே சிறப்­புப் பயண ஏற்­பா­டு­க­ளைத் தொடங்­கு­வ­தற்­கான தேதி இன்­ன­மும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

பயண ஏற்­பா­டு­க­ளுக்­கான விண்­ணப்ப மற்­றும் சுகா­தார நடை­முறை போன்ற மேல் விவ­ரங்­கள் பிந்­தைய தேதி­யில் அறி­விக்­கப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

இது­வரை எந்­த­வொரு ஐரோப்­பிய நாட்­டு­ட­னும் சிங்­கப்­பூர் சிறப்­புப் பயண ஏற்­பா­டு­க­ளைக் கொண்­டி­ருக்­க­வில்லை. தற்­போது இரண்­டா­வது கொரோனா கிரு­மித்­தொற்று அலையை ஐரோப்பா எதிர்­கொண்டு வரு­கிறது.

"இரு நாடு­க­ளுக்­கும் இடையே வர்த்­தக, அதி­கா­ர­பூர்­வப் பய­ணங்­களை மேற்­கொள்ள இந்­தச் சிறப்­புப் பயண ஏற்­பா­டு­கள் வழி­வ­குக்­கும்," என்று இரு நாட்டு அமைச்­சு­களும் அறிக்­கை­யில் தெரி­வித்­தன.

சிங்கப்பூரும் ஜெர்மனியும் ஏற்றுக்­கொண்டுள்ள கொவிட்-19 தடுப்பு, பொதுச் சுகா­தார நடை­முறை­க­ளுக்­குப் பய­ணி­கள் உட்­பட்டு நடக்க வேண்­டும். சிங்­கப்­பூ­ருக்­கும் மற்ற ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கும் இடையே எதிர்­கா­லத்­தில் இது­போன்ற பயண ஏற்­பா­டு­க­ளைத் தொடங்க இது ஓர் எடுத்­துக்­காட்­டாக விளங்­கும் என்று இரு நாடு­களும் குறிப்­பிட்­டன.

சிங்­கப்­பூர் கடை­சி­யாக ஹாங்­காங்­கு­டன் சிறப்­புப் பயண ஏற்­பாடு­க­ளைச் செய்­து­கொண்­டது. தற்­போது மலே­சியா, சீனா, ஜப்­பான், ஆஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட 10 வேறு நாடு­க­ளு­டன் சிங்­கப்­பூர் பயண ஏற்­பா­டு­க­ளைக் கொண்­டி­ருக்­கிறது.

இதற்­கி­டையே, ஜெர்­ம­னி­யில் குறு­கி­ய­கா­லம் தங்க சிங்­கப்­பூர்­வாசி­கள் அந்­நாட்­டிற்­குச் செல்­ல­லாம் என்று ஜெர்­மனி நேற்று அறி­வித்­தது. ஜெர்­ம­னி­யைச் சென்று அடைந்­த­வு­டன் பய­ணி­கள் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்ற தேவை­யில்லை. வரும் செவ்­வாய்க்­கி­ழமை இந்த நடை­முறை நடப்­புக்கு வரு­கிறது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், சிங்கப்பூர்வாசிகள் அங்கு செல்வதற்கான கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்த இவ்வாரம் ஐரோப்பிய மன்றம் பரிந்துரைகளை வெளியிட்டு இருந்ததைத் தொடர்ந்து ஜெர்மனியின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.