மிதக்கும் கணினித் தகவல் தொழிற்பேட்டைக்கு திரவ இயற்கை எரிவாயு மூலம் மின்சக்தி: 3 நிறுவனங்கள் கூட்டாக ஆராயும்

சிங்­கப்­பூ­ரில் மிதக்­கும் கணி­னித் தக­வல் தொழிற்­பேட்டை ஒன்றை அமைக்க ‘கெப்­பல் டேட்டா சென்­டர்ஸ் ஹோல்­டிங்ஸ்’ (கெப்­பல் டிசி) நிறு­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ளது.

அந்த மையத்­துக்­குத் தேவைப்­படும் மின்­சக்­தியைத் திரவ இயற்கை எரி­வாயு மற்­றும் நைட்­ர­ஜன் மூலம் பெறு­வது பற்றி இந்த நிறு­வ­ன­மும் சிட்டி கேஸ் மற்­றும் சிட்டி-ஓஜி கேஸ் எனர்ஜி சர்­விசஸ் என்ற நிறு­வ­ன­ங்களும் கூட்­டாக ஆரா­யும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக இவை நேற்று புரிந்­து­ணர்­வுக் குறிப்பு ஒன்­றில் கையெ­ழுத்­திட்­டன.

அத்­த­கைய ஒரு தொழிற்­பேட்டை இப்­போது ஆய்­வுக் கட்டத்­தில் இருப்­ப­தாக இந்த மூன்­றும் நேற்று அறி­வித்­தன.

திரவ இயற்கை எரி­வா­யுக் கொள்­மு­தல் பற்­றி­யும் நீண்ட கால போக்­கில் ஹைட்ரஜ­னுக்கு மாறு­வது குறித்­தும் இவை கூட்­டாக ஆரா­யும். குளிர் எரி­சக்தி பய­னீட்டு வாய்ப்பு பற்­றி­யும் ஆரா­யப்­படும்.

சிட்டி கேஸ் நிறு­வ­ன­மும் சிட்டி- ஓஜி நிறு­வ­ன­மும் இந்­தத் தொழில்­நுட்­பத்­தில் முன்­னணி நிறு­வ­னங்­கள். இவை மிதக்­கும் தொழிற்­பேட்­டைக்கு எரி­சக்தி சிக்­கன வழி­களை ஏற்­ப­டுத்­தித் தரும். அதோடு கரிம வெளி­யீ­டும் குறைக்­கப்­படும் என்று கெப்­பல் டிசி­யின் தலைமை நிர்­வாக அதி­காரி வோங் வாய் மெங் தெரி­வித்­தார்.

கெப்­பல் நிறு­வ­னம் ‘இலக்கு 2030’ என்ற ஓர் இலக்கை நிர்­ண­யித்­துள்­ளது. அதன்­படி இந்த நிறு­வ­னம் தனது உத்­தி­களில் இயற்கை வளத்­தைக் கட்­டிக்­காக்க முக்­கி­யத்­து­வம் அளிக்­கிறது.

இப்­போது இடம்­பெ­றக்­கூ­டிய ஒத்­து­ழைப்பு எரி­சக்­தியை மிச்­சப்­படுத்­தும். சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஆத­ர­வாக இருக்­கும். இதன் மூலம் இந்த இலக்கை நிறை­வேற்ற முடியும்.

மின்­னி­லக்­கப் பொரு­ளி­ய­லுக்­கான தேவை­க­ளைப் பாது­காப்­பான, நம்­பத்­த­குந்த, சுற்­றுச்­சூ­ழ­லுக்கு தோழ­மை­யான வழி­களில் நிறை­வேற்ற முடி­யும் என்­றும் நேற்று மூன்று தரப்­பு­களும் வெளி­யிட்ட கூட்டு அறிக்கை குறிப்­பிட்­டது.

மிதக்­கும் கணி­னித் தக­வல் தொழிற்­பேட்டை, திரவ இயற்கை வாயு மற்­றும் ஹைட்­ர­ஜன் எரிசக்தி­யு­டன் கூடிய கணி­னித் தக­வல் மையங்­கள் ஆகி­ய­வற்றை உரு­வாக்கு­வதற்கான வாய்ப்­பு­கள் பற்றி கெப்­பல் குழு­மம் ஆராய்ந்­து­வ­ரு­வ­தா­க­வும் திரு வோங் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!