சுடச் சுடச் செய்திகள்

நிரந்தரவாசத் தகுதிக்கான விண்ணப்பத்தின் தொடர்பில் அதிகாரிக்கு கையூட்டு: தாய், மகளுக்கு சிறைத் தண்டனை

சிங்கப்பூர் நிரந்தரவாசி ஆவதற்கான தன் விண்ணப்பத்தைத் துரிதப்படுத்தும் நோக்கில் மலேசிய மாது ஒருவர், சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனை ஆணையத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரி ஒருவருக்கும் அவரின் மகளுக்கும் மொத்தம் $1,500 கையூட்டு அளித்திருந்தார்.

இதன் தொடர்பில் நேற்று தாய், மகள் இருவருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

50 வயது தாயார் லூசி டியோவுக்கு 18 வாரச் சிறையும் 29 வயது மகள் ஷேரன் லூ வாய் வூன்னுக்கு ஆறு வாரச் சிறையும் விதிக்கப்பட்டது.

அத்துடன் குடிநுழைவு தொடர்பிலான ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிந்த ஷேரன், 1,500 வெள்ளியைத் தண்டனை பணமாகச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

மலேசியரான ஃபென்னி டே ஹுயி, 25, சிங்கப்பூர் நிரந்தரவாசி ஆகவேண்டும் என்பதற்காக உதவிக்கு அணுகியபோது தாய், மகள் இருவரும் கையூட்டு வாங்கியதுடன் குடிநுழைவுச் சோதனை ஆணையத்தின் மத்திய அடையாளப் பதிவக, தகவல் திட்டத்தை டியோ அனுமதி இல்லாமல் பயன்படுத்தியும் இருந்தார்.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இருவரும் நவம்பர் 2ஆம் தேதிமுதல் தங்களின் சிறைத் தண்டனையை நிறைவேற்றுவர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon