5 ஆண்டுகால ஆய்வு, மேம்பாட்டுத் திட்டம் குறித்து துணைப் பிரதமர் ஹெங்: மின்னிலக்கப் பொருளியல் முக்கிய அங்கம் வகிக்கும்

சிங்­கப்­பூ­ரின் அடுத்த ஐந்து ஆண்டு­கால ஆய்வு, புத்­தாக்­கம், தொழில் முயற்­சித் திட்­டத்­தில் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் முக்­கிய அங்­கம் வகிக்­கும் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்­து உள்ளார்.

நாட்­டின் தொழில்­நுட்­பத் திற­னா­ளர்­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க, நிறு­வ­னங்­க­ளு­டன் பங்­கா­ளித்­துவ முயற்­சி­யில் ஈடு­படு­வது அத்­திட்­டத்­தில் அடங்­கும்.

முன்­பை­விட தற்­போது அதி­க­மான பரி­வர்த்­த­னை­கள் இணை­யம்­வழி நடத்­தப்­ப­டு­வ­தால் இணை­யப் பாது­காப்­பில் கூடு­தல் கவ­னம் செலுத்­தப்­படும்.

இரண்டு நாள் நடை­பெ­றும் ‘ஃபார்ச்­சுன் குளோ­பல் ஃபாரம்’ எனும் அனைத்­து­ல­கக் கருத்­த­ரங்­கில் நேற்று பேசிய திரு ஹெங், $20 பில்­லி­யன் மதிப்­பி­லான இந்த ஆய்வு, புத்­தாக்­கம், தொழில் முயற்சித் திட்­டத்­தின் குறிப்­பி­டத்­தக்க அளவு மின்­னி­லக்­க­ம­ய­மா­தல் திட்­டத்­தில் செல­வி­டப்­பட்­ட­தைச் சுட்­டி­னார்.

இறு­திப்­ப­டுத்­தப்­படும் ஆய்வு, புத்­தாக்­கம், தொழில் முயற்­சித் திட்­டத்­தின்­கீழ், மின்­னி­லக்­கப் பொரு­ளி­யலை உரு­வாக்­கு­வ­தில் மேலும் கூடு­த­லான நிதி ஒதுக்­கப்­படும் என்று அவர் தெரி­வித்­தார்.

“எதிர்­கா­லத்­தில் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் முக்­கிய அங்­கம் வகிக்­கும் என நாங்­கள் நம்­பு­கி­றோம்,” என்­றார் அவர்.

மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் குறித்த கலந்­து­ரை­யா­டல் ஒன்­றி­லும் திரு ஹெங் பங்­கேற்­றார். ‘கிராப்’ வாடகை கார் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி ஆன்­டனி டானும் இதில் கலந்­து­கொண்­டார்.

மின்­னி­லக்க உரு­மாற்­றத்­தின் சவால்­கள், மற்ற உலக நாடு­க­ளு­டன் சிங்­கப்­பூர் தொடர்­புப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கான ஆற்­றல் உள்­ளிட்ட தலைப்­பு­களை ஒட்டி அவர்­கள் கலந்­து­ரை­யா­டி­னர்.

மாண­வர்­கள், கிராப் ஓட்­டு­நர்­கள், பொருள் விநி­யோக ஓட்­டு­நர்­கள் ஆகிய தரப்­பி­ன­ருக்­காக பயிற்சி, மேம்­பாட்­டுத் திட்­டங்­கள் சில­வற்­றில் மைக்­ரோ­சா­ஃப்ட் நிறு­வனத்­து­டன் பங்­கா­ளித்­துவ முயற்சி­யில் கிராப் ஈடு­படும் என்று நிகழ்ச்சி­யின் இறு­தி­யில் திரு டான் அறி­வித்­தார்.

மின்­னி­லக்க ஆற்­றலை வளர்ப்­பதி­லும் வேலை­வாய்ப்பு­களை மேம்­படுத்­து­வ­தி­லும் அவர்­களுக்கு உத­வு­வது இதன் இலக்கு.

இந்­தப் பங்­கா­ளித்­துவ முயற்­சி­யின் மூலம் அடுத்த ஆண்டு இறு­திக்­குள் அதி­க­பட்­சம் 5,000 ஓட்­டு­நர்­க­ளை­யும் 250 உயர் கல்வி நிலைய மாண­வர்­க­ளை­யும் சென்­ற­டைய இத்­திட்­டம் முற்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!